முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா துவங்கியது: ஏப்ரல் 1-ல் ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது

வியாழக்கிழமை, 9 மார்ச் 2023      ஆன்மிகம்
Tiruvarur-Thyagaraja-Swamy-

திருவாரூர்  தியாகராஜ சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறுகிறது. 

சப்தவிடங்க தலங்களில் முதன்மையானதும், சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் விளங்குகிறது. இக்கோயிலில் நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

அதையொட்டி தியாகராஜ சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழா தொடங்குவதை முன்னிட்டு கோவிலில் கொடி மரத்துக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை முழங்கி சிறப்பு பூஜைகள் செய்தனர். அதனைத் தொடர்ந்து கொடி ஏற்றி வைக்கப்பட்டு, விழா உற்சவம் தொடங்கி வைக்கப்பட்டது. 

நேற்று இரவு முதல் சந்திரசேகரர், அம்பாள், விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து வரும் 27-ம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு வெள்ளி வாகனம், பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் சந்திரசேகரர் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி உலகப் பிரசித்தி பெற்ற ஆழி தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தேரோட்டம் நடை பெற உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து