முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஞ்சாபில் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால்சிங் கைது : இணைய சேவைகள் இன்று வரை முடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
Amritpal-Singh 2023 03 19

Source: provided

ஜலந்தர் : பஞ்சாபில் பிரிவினைவாத தலைவரும், வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை போலீசார் நேற்று கைது செய்தனர். அதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் வரை இணைய சேவைகளை போலீசார்  முடக்கி வைத்துள்ளனர். 

பஞ்சாபை பிரித்து காலிஸ்தான் என்ற பெயரில் தனி நாடு உருவாக்கும் நோக்குடன் வெளிநாடுகளில் இருந்து இன்றும் சீக்கியர்கள் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாரிஸ் பஞ்சாப் டி என்ற அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங், பஞ்சாபில் இதற்கான முன்னெடுப்பை தீவிரமாக செயல்படுத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.

கடந்த மாதம் இவரது உதவியாளர் ஒருவரை கடத்தல் வழக்கில் அமிர்தசரஸ் புறநகர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து கத்தி மற்றும் துப்பாக்கி ஏந்திய தனது ஆதரவாளர்களுடன் காவல் நிலையத்தை அம்ரித்பால் சிங் முற்றுகையிட்டார். பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது உதவியாளர் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களை ஜலந்தர் மாவட்டம் மெகத்பூர் பகுதியில் பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர்.

முன்னதாக, ஜலந்தரில் அவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். ஆனால் இத்தகவலை முன்கூட்டியே அறிந்த அம்ரித்பால் சிங் ஒரு வாகனத்தில் தப்பிச் சென்றார். அவரை போலீசார் விரட்டிச் சென்று மெகத்பூர் பகுதியில் கைது செய்தனர். எந்த வழக்கில் கீழ் அம்ரித்பால் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீஸ் அதிகாரிகள் இன்னும் வெளியிடவில்லை. 

மேலும் பஞ்சாபில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நண்பகல் 12 மணி வரை இணையதள சேவையை போலீசார் முடக்கியுள்ளனர். மக்கள் அமைதி காக்க வேண்டும். புரளிகளை நம்ப வேண்டாம் எனவும் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து