முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

புதன்கிழமை, 22 மார்ச் 2023      தமிழகம்
CM-1 2023 03 22

Source: provided

சென்னை : தி.மு.க. தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள், பாராளுமன்ற தேர்தல் பணிகள் உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்குங்கள். பூத் கமிட்டி உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை தொடங்குங்கள். சட்டமன்றத் தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். 

தலைமையை மீறி வருந்தத்தக்க சில செயல்கள் நடப்பதாகவும்,  கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகளை முதல்வர் கேட்டுக் கொண்டார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து