முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நீதித்துறை சீர்திருத்த சட்டம் தற்காலிக நிறுத்தம் : இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      உலகம்
Netanyahu 2023 03 28

Source: provided

ஜெருசலேம் : புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்துள்ளார். 

இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு செயல்பட்டு வருகிறார். இவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே, இஸ்ரேல் நீதித்துறையின் செயல்பாடுகள் மற்றும் அதன் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் நெதன்யாகு தலைமையில் பாராளுமன்றத்தில் புதிதாக சட்டம் கொண்டு முயற்சிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தச் சட்டம் அமலாகும் பட்சத்தில் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் குறையும். மேலும், கோர்ட்டின் உத்தரவுகளை மீறவும் இஸ்ரேல் அரசுக்கு அதிகாரம் வழங்கும். அதேபோல், நீதிபதிகள் நியமிப்பதிலும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படும். 

இது நீதித்துறையை முடக்கும் செயல் எனக்கூறி இஸ்ரேலில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மக்கள் போராட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அந்த வகையில் போராட்டத்திற்கு டெல் அவிவ் விமான நிலைய ஊழியர்களும் ஆதரவு தெரிவித்து வேலையை புறக்கணித்தனர். 

இதனால் விமான சேவை பாதிக்கப்பட்டு டெல் அவிவ் விமான நிலையம் மூடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தண்ணீரை பாய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். 

ஆனாலும், நீதித்துறை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெ ர்சாக் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிய நீதித்துறை சீர்திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், புதிய நீதித்துறை சிர்திருத்தச் சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஒப்புதல் அளித்தார். போராட்டக்காரர்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார் என்று கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து