முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத சுதந்திரம் மோசமா? - அமெரிக்காவின் குற்றச்சாட்டை முற்றிலும் நிராகரித்தது இந்தியா

புதன்கிழமை, 17 மே 2023      இந்தியா
Arindam-Bakshi 2023-05-17

Source: provided

புதுடெல்லி : “இந்தியாவில் மத சுதந்திரம் மோசடைந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை தவறானது; உள்நோக்கம் கொண்டது” என்று இந்திய வெளியுறவுத்துறை நிராகரித்துள்ளது.

சர்வதேச அளவில் மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை கடந்த திங்கள்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மத சுதந்திரம் எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மத சுதந்திரம் மோசமடைந்து வருவதாகவும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், பட்டியல் சமூகத்தவர்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறையின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இந்திய வெளியுறவுத் துறை பதில் அளித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, "தவறான தகவல்களின் அடிப்படையில், உள்நோக்கம் கொண்ட அதிகாரிகள் இத்தகைய அறிக்கையை அளித்துள்ளார்கள். அமெரிக்கா உடனான உறவுக்கு இந்தியா மிகுந்த மதிப்பளிக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்பாக மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் இந்தியா, அமெரிக்காவுடன் தகவல்களை பரிமாறிக்கொள்கிறது.

இந்தியாவில் மத சுதந்திரம் தொடர்பான அமெரிக்க வெளியுறவுத் துறையின் முந்தைய அறிக்கையும்கூட இந்தியாவை விமர்சிப்பதாகவே இருந்துள்ளது. உள்நோக்கத்துடனும், ஒரு சார்புடனும் இதுபோன்ற அறிக்கைகளை சில அமெரிக்க அதிகாரிகள் வெளியிடுகின்றனர். இதுபோன்ற அறிக்கைகள் அவர்களின் நம்பகத்தன்மையை மேலும் சிதைப்பதாகவே அமையும்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து