முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்: பதக்க பட்டியலில் முதல் இடம்

புதன்கிழமை, 7 ஜூன் 2023      விளையாட்டு
World-Cup 2023 06 07

Source: provided

புதுடெல்லி : ஜெர்மனியில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு நேற்று மேலும் 2 தங்க பதக்கங்கள் கிடைத்தன. இதன் மூலம் மொத்தம் 11 பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.

அமன்பிரீத் சிங்... 

ஜெர்மனியின் சூல் நகரில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு சம்மேளனத்தின் சார்பில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இதில், ஆடவருக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அமன்பிரீத் சிங் தங்க பதக்கம் தட்டி சென்றார். அவர் மொத்தம் 586 புள்ளிகளை கைப்பற்றினார்.

மேகனா - பாயல்...

இதேபோன்று மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் குழு போட்டி ஒன்றில் இந்திய வீராங்கனைகளான மேகனா சதுலா, பாயல் கத்ரி மற்றும் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் ஆகியோர் இந்தியாவுக்கான தங்க பதக்கங்களை வென்று உள்ளனர். அவர்கள் கூட்டாக 1,719 புள்ளிகளை கைப்பற்றி உள்ளனர். இதனால், பதக்க பட்டியலில் இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்று முதல் இடம் பிடித்து உள்ளது.

அமெரிக்கா 3-வது...

தொடர்ந்து, 4 தங்கம், 3 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கங்களுடன் கொரியா 2-வது இடத்தில் உள்ளது. 3 தங்கம் மற்றும் 3 வெள்ளி என மொத்தம் 6 பதக்கங்களுடன் அமெரிக்கா பதக்க பட்டியலில் 3-வது இடம் பிடித்து உள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டி நாளை வரை (ஜூன் 9-ந்தேதி)தொடர்ந்து நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து