முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் போலீசார் பங்கேற்ற பாய்மர படகு பயணம் : அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Udayanidhi 2023-06-10

Source: provided

சென்னை : சென்னையில் மகளிர் போலீசார் பங்கேற்ற பாய்மர படகு பயணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

தமிழ்நாடு காவல் துறையில் மகளிர் காவலர்களின் 50-வது பொன்விழா ஆண்டினை தமிழ்நாடு காவல் துறை கொண்டாடி வருகிறது. அந்த வகையில் மகளிர் காவலர்கள் மட்டும் பங்கு பெறும் சென்னை பழவேற்காடு தொடங்கி கோடியக்கரை சென்று திரும்பும் சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவினை பாய் மரப்படகு மூலம் கடக்கும் கடல் பயணம் நேற்று முதல் வரும் 18-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. 

இந்த கடல் பயணத்திற்கு 25 பெண் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு அடிப்படை மற்றும் மேம்படுத்தப்பட்ட பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் மூலம் நடத்தப்படும் இதன் தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் நேற்று நடந்தது. 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து பாய்மரப் படகு பயணத்தை தொடங்கி வைத்தார். அமைச்சர் சேகர்பாபு, டி.ஜி.பி. சைலேந்திர பாபு, கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

பின்னர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,  தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ஆண்டுகள் ஆவதையொட்டி, அது தொடர்பான நிகழ்ச்சிகளை முதல்வர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாகவே பாய்மர படகு பயண சாகச நிகழ்ச்சியை கலைஞரின் நூற்றாண்டு தொடக்கத்தில் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

உலகிலேயே முதல் முறையாக இதுபோன்ற சாகச நிகழ்ச்சியை பெண் காவலர்கள் மேற்கொள்வதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடுமையான பயிற்சி மற்றும் மன உறுதியால் மட்டுமே இதுபோன்ற சாகசங்களை செய்ய முடியும். இந்த பயணத்தை வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். 

தி.மு.க. அரசு எப்போதும் மகளிர் காவலர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது.  தி.மு.க. ஆட்சியில்தான் பெண்கள் காவல்துறை உயர் பொறுப்பில் பணி அமர்த்தப்பட்டனர். பெண்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டால்தான் குரூப்-1 தேர்வில் அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று டி.எஸ்.பி. ஆகும் வாய்ப்பையும் பெற்றுள்ளனர். மகளிர் காவலர்கள் நலனுக்காக முதல்வர் ஏற்கனவே 9 சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார் என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 

மகளிர் நலன் கருதி ரோல்கால் என்கிற வருகையை காலை 7 மணியில் இருந்து 8 ஆக மாற்றி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் மதுரையில் பெண் காவலர்கள் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்கிற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்களுக்கு தனியாக ஓய்வு அறை கட்டப்படும் என்கிற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். 

மகளிர் காவலர்களின் குழந்தைகளின் நலன் கருதி காப்பகம் அமைக்கப்படும். கலைஞர் காவல் பணி விருது, கோப்பை ஆண்டுதோறும் வழங்கப்படும், பெண் காவலர்களின் குடும்ப சூழலுக்கு ஏற்ப விடுப்பு, பணி மாறுதல் வழங்கப்படும், துப்பாக்கி சுடும் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும் என்பது போன்ற அறிவிப்புகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இவை அனைத்தும் உறுதியாக செயல்படுத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 17 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து