எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பிரச்சினை நீடித்து வருகிறது. இந்த நிலையில், நடப்பாண்டு ஆகஸ்டு மாதத்துக்கான நதிநீர் பங்கை கர்நாடகம் வழங்க மறுப்பதாக கூறி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆகஸ்டு 14-ம் தேதி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை கடந்த ஆகஸ்டு 25-ம் தேதி விசாரித்த சுப்ரீம்கோர்ட் காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தது. அதன்பிறகு வழக்கு செப்டம்பர் 1-ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டதால் தமிழக அரசின் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் முறையிடப்பட்டது.
அப்போது, நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரம் செப்டம்பர் 6-ம் தேதி விசாரிக்கப்படும் என கூறி இருந்தனர். இந்த நிலையில் செப்டம்பர் 6-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் விசாரிக்கப்படும் வழக்குகள் பட்டியலில் இந்த விவகாரம் இடம் பெற்றிருந்தது.
ஆனால், அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பி.எஸ். நரசிம்மா விடுமுறையில் இருந்ததால், அந்த வழக்கு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பி.ஆர். கவாய் அமர்வு முன் இந்த விவகாரத்தை தமிழகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் குறிப்பிட்டு உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
அப்போது, நீதிபதி பி.ஆர்.கவாய் செப்டம்பர் 21-ம் தேதி இந்த விவகாரம் விசாரணைக்குப் பட்டியலிடப்படும் என்று கூறி இருந்தார். அதன்படி இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது.
அதன்படி நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.எஸ். நரசிம்மா, பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை நேற்று விசாரித்தது. தமிழக அரசு சார்பில் வக்கீல்கள் முகுல் ரோத்தகி, வில்சன், உமாபதி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது அவர்கள், ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறப்பதில் கர்நாடகா பிரச்சினை செய்து வருகிறது. காவிரி ஆணையத்தின் உத்தரவை கர்நாடகம் செயல்படுத்துவதில்லை. தற்போதைய சூழலில் கர்நாடகா அணைகளில் இருக்கும் நீரின் அளவைப் பொறுத்து பார்த்தாலும், தமிழகத்துக்கு 6400 கன அடி தண்ணீரை திறந்து விட வாய்ப்பு உள்ளது என காவிரி மேலாண்மை ஆணையம் முதலில் கூறியது.
இருப்பினும் 5 ஆயிரம் கன அடி நீரை தமிழகத்துக்கு திறந்து விட்டால் போதும் என கர்நாடகாவுக்கு உத்தரவிட்டனர். ஆனால் கர்நாடகம் அந்த உத்தரவையும் கூட பின்பற்றுவதில்லை. ஒவ்வொரு முறையும் ஒரு உத்தரவை ஆணையம் பிறப்பிக்கும் போதும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தமிழகத்துக்கான நீரை கொடுக்க கர்நாடகம் மறுத்து வருகிறது.
மேலும், காவிரி ஒழுங்காற்று குழுதான் தண்ணீரின் அளவு உள்ளிட்ட புள்ளி விவரங்களை கவனத்தில் கொண்டு தண்ணீர் திறப்பதற்கான அளவை நிர்ணயம் செய்கிறது. அவர்கள் தமிழ்நாட்டுக்கு தேவையான தண்ணீரை திறந்து விட போதுமான பரிந்துரைகளை பல்வேறு கட்டங்களாக கொடுத்த போதும் காவிரி மேலாண்மை ஆணையம் அந்த அளவில் இருந்து எப்போதும் குறைத்து தண்ணீரை திறக்க உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் 15 ஆயிரம் கன அடி, 10 ஆயிரம் கன அடி, 7200 கன அடி, 5 ஆயிரம் கன அடி, என தொடர்ச்சியாக தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டு கொண்டே வந்துள்ளது. எங்களுக்கு தர வேண்டிய தண்ணீர் அளவு அதிக அளவில் நிலுவையில் உள்ளது.
ஆனால் அதை எல்லாம் நாங்கள் கேட்கவில்லை. தற்போதைக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரை மட்டுமாவது திறந்து விட வேண்டும் என்றுதான் கேட்கிறோம். மழை பற்றாக்குறை இருக்கிறது என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்.
ஆனால் அதற்காக அவர்களிடம் இருக்கும் நீரை கூட பகிர்ந்து கொடுக்க மாட்டேன் என்றால் எப்படி? நாங்கள் கடைமடை மாநிலமாக இருக்கிறோம். அவர்களுக்கு அவ்வளவு பிரச்சினை என்றால் எங்களுக்கு எவ்வளவு இருக்கும்?
வறட்சியின் பாதிப்பு என்பது அவர்களுக்கு மட்டுமல்ல, எங்களுக்கும்தான். கடந்த 12-ம் தேதி கூட்டத்தின் போது, 56 சதவீதம் நீர் பற்றாக்குறை என கூறினார்கள். ஆனால் 6400 கன அடி திறக்க வேண்டும் என காவிரி ஒழுங்காற்று குழு குறிப்பிட்டுள்ளது. ஆனால் 5000 கன அடி என இறுதி உத்தரவில் கூறப்பட்டுள்ளது. புள்ளி விவரத்தை கணக்கிட்டு அதனடிப்படையில் நீர் வழங்க உத்தரவிடப்பட்டும் அதனை கர்நாடகம் செயல்படுத்த மறுக்கிறது என்று வாதிட்டனர்.
அப்போது கர்நாடகா அரசு வக்கீல் கர்நாடகாவில் மழை இல்லை, காவிரியில் நீரும் குறைவாக இருக்கிறது. தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் விவசாயத்துக்கு மட்டும்தான். ஆனால் கர்நாடகாவை பொறுத்த வரை குடிநீர், விவசாயம் என அனைத்துக்கு நீர் தேவை. அதுதான் எங்களது பிரச்சினை. எங்களால் வினாடிக்கு 2500 கன அடி மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகளுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட முடியாது. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் 15 நாட்களுக்கு ஒரு முறை கூடி சூழலை ஆராய்ந்து வருகிறது.
மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழு உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை கர்நாடக அரசு அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளையில் காவிரியில் 24 ஆயிரம் கன அடி நீரை திறக்க கோரும் தமிழ் நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு உள்ளது. வறட்சி கால அட்டவணைப்படி தமிழ்நாட்டுக்கான உரிய நீரை கர்நாடகா திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 3 min ago |
தக்காளி சாஸ்![]() 4 days 3 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்
09 Dec 2023சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வி
-
நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
09 Dec 2023சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் அமித்ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் கூட்டம்
09 Dec 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கூட்டமைப்பின் 26-வது
-
ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டதா?- ஆவின் நிர்வாகம் விளக்கம்
09 Dec 2023சென்னை : ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீ
-
டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்
09 Dec 2023அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரண
-
பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்
09 Dec 2023மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
-
உலகக்கோப்பை போட்டி நடந்த பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பீடு
09 Dec 2023லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - த
-
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உழைத்திடுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
09 Dec 2023சென்னை : நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன் மூலம் நம் மாணவர்களின் மருத்த
-
நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மழையால் பாதிக்கப்படவர்களுக்கு நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது ஏன்? என்று தற்போது தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிப்பு
09 Dec 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
-
உ.பி.யில் டிரக் மீது கார் மோதியதில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழப்பு
10 Dec 2023லக்னோ : உத்தரபிரதேசத்தில் டிரக் மீது கார் மோதிய விபத்தில் குழந்தை உட்பட 8 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர்.
-
அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் கட்டாயம்: அமைச்சர்கள் புதிய கார் வாங்க தடை: மிசோரம் முதல்வர் உத்தரவு
10 Dec 2023அய்சால் : அரசு ஊழியர்கள் தங்கள் வருகையை பதிவு செய்ய இனி அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் முறை கட்டாயப்படுத்தப்படும்.
-
நிவாரண பொருட்களை கொள்ளை அடிக்கும் ஹமாஸ் அமைப்பினர் : வீடியோவை வெளியிட்டது இஸ்ரேல்
10 Dec 2023ஜெருசலேம் : காசாவில் பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகள் வழங்கிய மனிதாபிமான பொருள்களை கொள்ளையடித்ததாகவும் ஹமாஸ் அமைப்பின் மீது இஸ்ரேலிய பாதுகாப்புப் படை குற்ற
-
அண்டை நாடுகள் குறித்து நவாஸ் ஷரீப் கருத்து
10 Dec 2023இஸ்லாமாபாத் : எனது ஆட்சி காலத்தில்தான் இந்திய பிரதமர்களான வாஜ்பாய்(1999), நரேந்திர மோடி(2015) ஆகியோர் பாகிஸ்தானுக்கு வருகை தந்தனர் என அண்டை நாடுகள் குறித்து பாகிஸ்தான்
-
அடுத்த புதிய முதல்வரை தேர்வு செய்ய ம.பி.யில் இன்று பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
10 Dec 2023போபால் : மத்திய பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
-
தமிழகத்தில் 16-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
10 Dec 2023சென்னை : தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
370-வது சட்டப்பிரிவு ரத்து வழக்கு: இன்று தீர்ப்பளிக்கிறது சுப்ரீம் கோர்ட்
10 Dec 2023புதுடெல்லி : ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு மத்திய பா.ஜ.க.
-
அரையாண்டு தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு
10 Dec 2023சென்னை : 6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு வரும் 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமெரிக்க மாகாணத்தை தாக்கிய சூறாவளி புயல்: 6 பேர் உயிரிழப்பு
10 Dec 2023நாஷ்வில்லே : அமெரிக்க மாகாணத்தை சூறாவளி புயல் கடுமையாக தாக்கியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வங்கதேசத்தில் முதல் முறையாக தீயணைப்பு படைக்கு பெண்கள் நியமனம்
10 Dec 2023டாக்கா : அண்டை நாடான வங்காளதேசத்தில் தீயணைப்புத் துறையில் பணிபுரிய பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
-
பயங்கரவாதிகள் தாக்குதல்: சிரியாவில் 7 வீரர்கள் பலி
10 Dec 2023டமாஸ்கஸ் : சிரியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
-
மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வருகை : 4 மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
10 Dec 2023சென்னை : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று சென்னை வருகிறது.