முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க .- பா.ஜ.க. கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை பேசும்: கோவையில் அண்ணாமலை பேட்டி

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      அரசியல்
Annamalai 2

கோவை, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணி முறிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும் என்று தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். 

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள்  கூட்டத்தில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், கோவையில் நடைபயணம் மேற்கொண்டிருந்த பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலையிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது அண்ணாமலை கூறியதாவது, 

கோவையில் என் மண் என் மக்கள் யாத்திரை நடைபெற்று கொண்டிருக்கிறது. யாத்திரையில் அரசியல் குறித்து பேச விரும்பவில்லை. அ.தி.மு.க.வின் அறிக்கையை படித்தோம். அ.தி.மு.க. முடிவு குறித்து தற்போது எதுவும் பேச விரும்பவில்லை. இது குறித்து பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறேன்.  

பா.ஜ.க. ஒரு தேசிய கட்சி. அனைத்திற்கும் ஒரு நடைமுறை உள்ளது. தேசிய தலைவர்கள் உள்ளனர். அ.தி.மு.க.வின் முடிவு தொடர்பாக தேசிய தலைமை பேசும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து