முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்
Velu-2023-09-28

சென்னை, தமிழகத்தில் சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு கலந்துரையாடினார்.

சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின் அழைப்பிற்கிணங்க,  சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற அமைச்சர் எ.வ.வேலு, துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்,  சிங்கப்பூரிலுள்ள இந்திய தூதரக ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் டி.பிரபாகர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் சிங்கப்பூர் துறைமுக சரக்குப் பெட்டக முனையத்தை பார்வையிட்டார். அப்போது அமைச்சர் எ.வ.வேலுவிடம், சிங்கப்பூர் துறைமுகத்தின் சிறப்புகளைப் பற்றி  சிங்கப்பூர் துறைமுகத்தின் பிரதிநிதி எடுத்து கூறினார்.

பன்னாட்டு துறைமுக சரக்குப் பெட்டக முனையங்களில், சிங்கப்பூர் சரக்குப் பெட்டக முனையம் முதன்மையான ஒன்றாகும். இது சிங்கப்பூர் சரக்குப் பெட்டக பரிமாற்ற மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த சரக்குப் பெட்டக முனையம், துறைமுக சேவைகள் மற்றும் சரக்கு தீர்வுகளை வழங்குகிறது.  2023-ம் ஆண்டில், சரக்குகளை கையாள்வதில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டபோதிலும், இந்த துறைமுகம் மட்டும், 37 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை வெற்றிகரமாக கையாண்டுள்ளது. பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு, கணினி சார்ந்த ஒருங்கிணைந்த துறைமுக முனைய இயங்குதல் வசதி மற்றும் துறைமுக வலைதளம் போன்ற நவீன தொழிற்நுட்பங்கள். இந்த சாதனைக்கு காரணமாகும். சிங்கப்பூர் துறைமுகம் 55 கப்பல்கள் நிறுத்தும் தளம் மற்றும் சுமார் 50 மில்லியன் சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது என்று அமைச்சரிடம் சிங்கப்பூர் பிரதிநிதி விளக்கி கூறினார்.

சிங்கப்பூர் துறைமுக அலுவலர்களிடம், அமைச்சர் எ.வ.வேலு, தமிழகத்தில்  1,076 கிலோ மீட்டர் நீளமுடைய கடற்கரை உள்ளது என்பதை தெரிவித்து, கடலூர் மற்றும் நாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் சிறு துறைமுகங்கள் அமைந்துள்ளன. இந்த துறைமுகங்களையோ அல்லது இதர சிறுதுறைமுகங்களில், ஏதேனும் பொருத்தமான சிறு துறைமுகங்களை மேம்படுத்துவது தொடர்பாக, விரிவாக விவாதித்தார்   மேலும், தமிழகத்தின் கடற்கரையின் திறனைப் பயன்படுத்துவதை, நோக்கமாக கொண்ட பிற வரவிருக்கும் திட்டங்களைப் பற்றியும் எடுத்துரைத்தார். தமிழகத்தில்  சிறு துறைமுகங்களை மேம்படுத்த அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான சாத்தியமான வழிகள் குறித்தும், சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகளுடன் அமைச்சர் எ.வ. வேலு கலந்துரையாடினார். மேலும்  துறைமுகங்கள் மற்றும் கடல்சார் திட்டங்களுக்கு, முதலீடுகளை எளிதாக்குவதற்கு, அனைத்து உதவிகளையும் வழங்குவதாக,  அமைச்சர் எ.வ.வேலு உறுதியளித்தார்.   அப்போது தமிழகத்தில் உள்ள  சிறு துறைமுகங்களை மேம்படுத்த, அமைச்சர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, சிங்கப்பூர் துறைமுக பிரதிநிதிகள் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்தார்கள். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து