முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மிக மோசமான நிலைக்கு சென்ற காற்றின் தரம்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
delhi-pollution-2023-11-08

புது டெல்லி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும். இந்த நிலையில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் மோசமான புகை மூட்டத்தால் மக்கள் சுவாசிக்க முடியாத நிலையில் இருந்தனர். 

டெல்லியில் காற்றின் தர குறியீடு 300 புள்ளிகளை தாண்டி இருந்தது. இது மிகவும் மோசமான பாதிப்பு ஆகும். இதனால் கடந்த 9-ம் தேதி முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு சற்று குறைந்திருந்ததால் நேற்று முதல் அனைத்து அரசு , அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தகவலின்படி, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு  (310) மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் தரம் 50-க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து