முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பரில் 6 நாள் வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்' அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023      இந்தியா
Bank 2023 08 08

புதுடெல்லி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் டிசம்பரில் 6 நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் மற்றும் வங்கி விடுமுறைகள் காரணமாக டிசம்பர் மாதத்தில் வங்கிகள் அதிக நாள்கள் செயல்படாத நிலை ஏற்படவுள்ளது.

வங்கி ஊழியர்களின் சங்கங்கள், டிசம்பர் மாதம் 6 நாள்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. ஆனால், அனைத்து வங்கி ஊழியர்களும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA) 6 நாள்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதன்படி, டிச.4 முதல் டிச.11 ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளிலும் போதுமான ஆள்சேர்ப்பு கோரியும் மற்றும் நிரந்தர பணியிடங்களுக்கான வேலைகளை 3-ம் நிறுவனத்திற்கு கொடுப்பதை எதிர்த்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

வங்கி ஊழியர்களின் சங்கங்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்தம் காரணமாக பல வங்கிகள் செயல்படாது என்றாலும், செல்போன் மற்றும் இணைய வழி செயல்பாடுகள் மூலம் வங்கிச் சேவைகள் தடையின்றி செயல்படும். 

வேலைநிறுத்தத் தேதிகள்:

டிசம்பர் 4: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), பஞ்சாப் மற்றும் சிந்து வங்கி மற்றும் பாரத ஸ்டேட் வங்கி (SBI) ஆகியவற்றில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 5: பாங்க் ஆப் பரோடா மற்றும் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 6: கனரா வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிகளில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 7: இந்தியன் வங்கி மற்றும் யூகோ வங்கியில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 8: யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

டிசம்பர் 11: அனைத்து தனியார் வங்கிகளிலும் அகில இந்திய வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும்.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் அவரது எக்ஸ் பக்கத்தில் 2019 முதல் 2023 வரை வேலைவாய்ப்பின்மை கணிசமாக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அறிவிப்பின்படி, அரசு மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்பார்கள் எனத் தெரிவித்துள்ளது. 

ரிசர்வ் வங்கியின் பட்டியலின்படி, 2023 டிசம்பரில் 11 நாள்கள் வரை வங்கிகள் செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாள்களின் விடுமுறை மட்டும் 7 நாள்கள் ஆகும். நாடு முழுவதும் டிசம்பர் மாதத்தில் மட்டும் வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம், பண்டிகை விடுமுறைகள், வார இறுதி நாள்கள் விடுமுறை என 24 நாள்கள் வரை செயல்படாத நிலை ஏற்படவுள்ளது. ஆனால், அந்தந்த மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் மாநிலங்களில் அறிவிக்கப்படும் விடுமுறை நாள்களுக்கு ஏற்றவாறு வங்கிகள் செயல்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து