முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.வி.ராஜூ சர்ச்சை பேச்சு:நடிகர் கருணாஸ் புகார்

புதன்கிழமை, 21 பெப்ரவரி 2024      தமிழகம்
Karunas

Source: provided

சென்னை:எந்தவித ஆதாரமுமின்றி ஏ.வி.ராஜூ பேசியுள்ளார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.

கூவத்தூர் விவகாரம் குறித்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ பேசியது சர்ச்சையானது. இதில் தனது பெயரை கெடுக்கும் நோக்கில் எந்தவித ஆதாரமுமின்றி ஏ.வி.ராஜூ பேசியுள்ளார் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார். ஏ.வி.ராஜூ அருவருப்பான மற்றும் உண்மைக்கு மாறான செய்தியை பரப்பியுள்ளார். ஏ.வி ராஜூ மீதும் பல யூடியூப் சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து வீடியோ பதிவுகளை நீக்கி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து