முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிபர் ஜோபைடனின் மகன் குற்றவாளி: அமெரிக்க கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      உலகம்
Hunter-Biden 2024-05-12

Source: provided

வாஷிங்டன் : சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என  கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

அமெரிக்கா அதிபராக இருக்கும் ஜோபைடனின்  மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது  கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.  இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அந்த வழக்குகளின் மீதான விசாரணை அந்நாட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய குற்றச்சாட்டுகளில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என  கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.   முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் 5 ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹண்டர் பைடனுக்கு   தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. 

அதே நேரம் அவரது தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்க சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு 120 நாட்களில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர்  மாதம் நடக்க உள்ள நிலையில், அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது.    

இந்த தீர்ப்பு வெளியான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் பைடன், கோர்ட்டு அளித்த  தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.  அதே நேரம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து