முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு எம்.எல்.ஏ.வாக தாரகை கத்பெர்ட் பதவியேற்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2024      தமிழகம்
CM-1 2024-05-12

Source: provided

 சென்னை : விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

விளவங்கோடு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த விஜயதரணி, உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். இதையடுத்து காலியாக இருந்த விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தோ்தல், மக்களவைத் தோ்தலுடன் நடைபெற்றது. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாரகை கத்பர்ட் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தாரகை கத்பெர்ட், சட்டப்பேரவை உறுப்பினராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். 

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ  பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து