Idhayam Matrimony

போட்டி கைவிடப்பட்டது

புதன்கிழமை, 12 ஜூன் 2024      விளையாட்டு
ICC 2023 06 24

Source: provided

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்லில் 23-வது 'லீக்' ஆட்டம் நடை பெற இருந்தது. இதில் 'டி' பிரிவில் உள்ள இலங்கை-நேபாளம் அணிகள் மோத வேண்டியது. ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2-வது போட்டி இதுவாகும். ஏற்கனவே 'பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஸ்காட் லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தாகி இருந்தது. இலங்கை-நேபாளம் இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. 

அந்த அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. வெற்றிபெற வேண்டிய ஆட்டம் மழையால் ரத்தானதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளி யேற்றப்படும் நிலையில் இருக்கிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்று இருந்தது. 1 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 17-ந் தேதி மோதுகிறது. ஒரு புள்ளியுடன் உள்ள நேபாளம் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் வங்காள தேசம், நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

வாய்ப்பை இழந்த இந்தியா 

பிபா உலக கோப்பை-2026, ஆசிய கோப்பை-2027க்கான கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஆசிய சாம்பியன் கத்தார் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் எல்லைக் கோட்டை தாண்டி சென்ற பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வந்து கத்தார் வீரர்கள் கோல் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

போட்டியின் 73-வது நிமிடத்தில் கோட்டுக்கு வெளியே சென்ற பந்தை அல் ஹசன் உள்ளே தள்ளி விட, அய்மென் கோல் அடித்ததால் 2-1 என்ற கோல் கணக்கில் கத்தார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. விதிப்படி தவறு என்றாலும், ரெஃப்ரீ கத்தாருக்கு சாதகமாக நடந்து கொண்டது சர்ச்சையாகியுள்ளது. மேலும் இப்போட்டியில் கால்பந்தில் ரிவ்யூ பார்க்கும் VAR முறையை பயன்படுத்தாதது ஏன்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த போட்டியில் தோற்ற இந்திய அணி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது.

ரிஸ்வான் மோசமான சாதனை

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், கனடா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த கனடா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆரோன் ஜான்சன் 52 ரன்கள் எடுத்தார்.பாகிஸ்தான் சார்பில் முகமது அமீர், ஹரிஸ் ராப் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 17.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முகமது ரிஸ்வான் 53 ரன்கள் எடுத்தார். பாபர் அசாம் 33 ரன் எடுத்தார்.

இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அரைசதம் அடிக்க 52 பந்துகளை எடுத்துக்கொண்டார். இதன்மூலம் அவர் மோசமான சாதனையை படைத்துள்ளார்.டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மெதுவான அரைசதம் (பந்துகள் அடிப்படையில்) அடித்த வீரர் என்ற மோசமான சாதனையை ரிஸ்வான் (52 பந்துகள்) படைத்தார். இதற்கு முன் இந்தப் பட்டியலில் டேவிட் மில்லர் (50 பந்துகள் - நெதர்லாந்துக்கு எதிராக, 2024) முதல் இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து