Idhayam Matrimony

ஆந்திர முதலமைச்சராக முறைப்படி பொறுப்பேற்றார் சந்திரபாபு நாயுடு

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
chandrababu-naidu

Source: provided

அமராவதி: ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் வேத மந்திரங்கள் முழங்க முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஆந்திர மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, 4-வது முறை ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தின் தலைமை செயலகத்திற்கு நேற்று சந்திரபாபு நாயுடு வருகை தந்தார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமை செயலகத்திற்கு வருவதற்கு முன்பு திருப்பதி மற்றும் விஜயவாடா துர்கா ஆகிய கோவில்களில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தலைமை செயலகத்திற்கு வரும் வழியெங்கும் தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தனது மனைவி புவனேஸ்வரியுடன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்த சந்திரபாபு நாயுடுவிற்கு தலைமை செயலாளர் நீரப் குமார் பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து