முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2024      இந்தியா
Ajith-Thovaal

Source: provided

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் தோவலுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியில் மூன்றாவது முறையாக பா.ஜ.க. தலைமையிலான அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2014-ம் ஆண்டு முதல் முறையாக மோடி பிரதமரான போது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார் அஜித் தோவல். 2019-ம் ஆண்டில், மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சியில், அஜித் தோவல் இந்த பதவிக்கு மீண்டும் நியமிக்கப்பட்டார். தற்போது 3-வது முறையாக பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். அஜித் தோவலுக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் பவுரி மாவட்டத்தில் உள்ள கிரி கிராமத்தில் 1945-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி பிறந்த அஜித் தோவல், கேரள கேடர் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். இவர் உளவு அமைப்பின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் திறம்பட பணியாற்றியவர். காந்தகார் விமானக் கடத்தல், புல்வாமா தாக்குதல் என நெருக்கடியான நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டவர். சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து