முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழிசையுடன் அண்ணாமலை சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2024      தமிழகம்
Annamalai 2024-05-14

Source: provided

சென்னை : முன்னாள் கவர்னரும், பாஜ., மூத்த தலைவருமான தமிழிசையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார்.

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழா மேடையில் தமிழிசையை அழைத்த அமித்ஷா, அவரிடம் ஏதோ சீரியஸாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் பேசியதால் பா.ஜ.,வில் ஏற்பட்ட சலசலப்பு தொடர்பாக தமிழிசையை அமித்ஷா கண்டித்ததாக சிலர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து தமிழிசை கூறியதாவது., சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் அமித்ஷா அறிவுரை தான் கூறினார். தொகுதி மற்றும் அரசியல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு பிந்தைய பணிகள், தேர்தலில் மேற்கொண்ட சவால்கள் குறித்து கேட்டறிந்தார். இவ்வாறு அவர் விளக்கம் அளித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழிசையை அவரது வீட்டில் அண்ணாமலை சந்தித்து பேசினார்.இது தொடர்பாக அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது., பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், தமிழக பாஜ.வின் தலைவராக திறம்பட செயல்பட்டவருமான அக்கா தமிழிசையை, அவரது இல்லத்தில் நேரில் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி. தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த தமிழிசையின் அரசியல் அனுபவம், ஆலோசனைகளும் கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தை தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அந்த பதிவில் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து