முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வை தொடர்ந்து விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பு செய்த தே.மு.தி.க. : ஜனநாயகம் கேள்விக்குறியாகி விட்டதாக விளக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

சென்னை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தே.மு.தி.க.வும் அறிவித்துள்ளது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள அ.தி.மு.க அறிவித்த நிலையில், தற்போது தே.மு.தி.க.வும் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  

இன்றைய  ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகிறது.  இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் விரயம் செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த புகழேந்தி கடந்த  ஏப்ரல் மாதம் உயிரிழந்ததையடுத்து அந்த தொகுதி காலியானது. இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதன்படி, வரும் 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில்  தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. களம் இறங்கியுள்ளது. பா.ம.க. வேட்பாளராக சி. அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். 

அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட தே.மு.தி.க. தற்போது, அ.தி.மு.க.வை பின்பற்றி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து