முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டீப் பேக் வீடியோ விவகாரம்: பார்லி. கூட்டத் தொடரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை கொண்டு வர மத்திய அரசு திட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      இந்தியா
Central-government 2021 12-

Source: provided

புதுடெல்லி : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக டீப் பேக் வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாவதை தடுத்திட டிஜிட்டல் இந்தியா மசோதா கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏ.ஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் மூலம், மார்பிங் செய்து , பாலிவுட் நடிகைகள் சிலரின் வீடியோ, புகைப்படங்கள்  டீப்பேக் மூலம் சமூக வலைத்தளங்களில் கடந்தாண்டு பகிரப்பட்டது நாடு முழுதும் அதிர்வலையை வெளிப்படுத்தியது. இதற்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்தார். 

ஒரு கட்டத்தில் பிரதமர் மோடி கார்பா' நடனம் ஆடும் டீப் பேக் வீடியோ வெளியானது குறித்து தன் கவலையையும் வெளியிட்டார். இந்நிலையில் டீப் பேக் விவகாரங்களுக்கு கடிவாளம் போட, மத்திய அரசு  டிஜிட்டல் இந்தியா  மசோதாவை கொண்டு வரவும், ஒழுங்குப்படுத்திடவும் திட்டமிட்டுள்ளது. 

இதையடுத்து நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரின் போது அனைத்து கட்சிகளின் ஒரு மித்த கருத்துடன் இம்மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து