முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: ஆஸி., வெற்றியால் சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2024      விளையாட்டு
16-Ram-50

Source: provided

நியூயார்க்: ஸ்காட்லாந்தை வெளியேற்றிய ஆஸ்திரேலியா வெற்றியால் 

சூப்பர் 8-க்கு முன்னேறிய இங்கிலாந்து அணி.

லீக் சுற்றிலேயே...

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஏராளமான டுவிஸ்ட் சம்பவங்களுடன் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி வருகின்றன. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முன்னணி அணிகள் லீக் சுற்றிலேயே வெளியேறின.

மழை காரணமாக...

இந்த தொடரில் இங்கிலாந்து அணி குரூப் பி-இல் இடம்பெற்றுள்ளது. இதில் இங்கிலாந்து அணி விளையாட வேண்டிய முதல் போட்டியே மழை காரணமாக கைவிடப்பட்டது. அதன் பிறகு விளையாடிய இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது.

வெளியேறும் சூழல்...

இதைத் தொடர்ந்து ஓமன் மற்றும் நமீபியா அணிகளுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தனது நெட் ரன் ரேட்டை அதிகப்படுத்தியது. இந்த நிலையில், நேற்று காலை நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றால், இங்கிலாந்து அணி தொடரில் இருந்து வெளியேறும் சூழல் உருவானது. எனினும், ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

நெட் ரன் ரேட்... 

இதன் காரணமாக நெட் ரன் ரேட் அடிப்படையில், குரூப் பி-இல் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. 

35வது லீக் ஆட்டம்...

முன்னதாக  டி20 உலகக்கோப்பை தொடரின் 35வது லீக் ஆட்டம் செயின்ட் லூசியா மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. 

அடுத்தடுத்து அவுட்...

பின்னர் கடின இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஒருகட்டத்தில் தடுமாறியது. இருப்பினும் பின் வரிசையில் வந்த ஸ்டாய்னிஸ், டிராவிஸ் ஹெட்டுக்கு நல்ல ஒத்துழைப்பு அளித்தார். இருவரும் அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஆஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. 

வெளியேறியது...

இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், குருப் பி பிரிவில் 5 புள்ளிகளுடன் இருந்த நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அதேசமயம் ஸ்காட்லாந்து அணியும் 5 புள்ளிகளை பெற்றிருந்த போதிலும், அந்த அணிக்கு ரன்ரேட் இல்லாத காரணத்தால் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து