முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வு முறைகேடு விவகாரம்: தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரிக்கை

திங்கட்கிழமை, 17 ஜூன் 2024      இந்தியா
Dharmendra Pradhan 2023 06 21

Source: provided

புவனேஷ்வர் : நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார்.

நீட் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக, பீகார் தலைநகர் பாட்னாவில் சில தேர்வு மையங்களில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியான நிலையில் இதில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. தேர்வு மையத்தில் தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை விட குறைவான நேரமே ஒதுக்கப்பட்டதாக கூறி 1,563 மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்வுத்தாள் வெளியானதாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் கூடுதல் மதிப்பெண்கள் விவகாரம் தொடர்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றது. மேலும், ஏற்கனவே நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் 1,563 மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மதிப்பெண்ணை ரத்து செய்ய கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், சம்மந்தப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்தவும் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீட் விவகாரத்தில் யாரேனும் தவறு செய்திருந்தால் கடுமை நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, முதற்கட்ட தகவல்படி, குறைவான தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டதால் சில மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டதில் மத்திய அரசிற்கு உடன்பாடு இல்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்ட 1,563 மாணவ-மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது.

மேலும் இரு இடங்களில் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் உள்பட யார் தவறு செய்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து