முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் 27 வரை வெப்ப அலை வீசும்: வட மாநிலங்களுக்கு 'ரெட் அலர்ட்'

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2024      இந்தியா
SUN 2023-02-28

புதுடெல்லி, ஜூன் 27 வரை வெப்ப அலை வீசும் என்று டெல்லி, அரியாணா உள்ளிட்ட வட மாநிலங்களுக்குவெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாள்களாக வெப்பநிலை அதிகரித்து வருகிறது. மாதத்தின் தொடக்கத்தில் வெப்பம் மேலும் அதிகரித்து நகரத்தின் பெரும்பாலான இடங்களில் அதிபட்ச வெப்பநிலையாக 50 டிகிரி செல்சியஸை நெருங்கியிருந்தது. இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டது.

இந்த நிலையில், டெல்லியில் நேற்று (ஜூன் 18) 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், இன்று மேலும் 6 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் தில்லி மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியாணா, சண்டீகர், டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசலப் பிரதேசம், உத்தரகண்ட், பீகார் மற்றும் ஜார்க்கண்டின் சில பகுதிகளிலும் வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 27ம் தேதிக்குப் பிறகு வடமாநிலங்களில் வெப்ப அலை குறையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து