முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா திரில் வெற்றி

புதன்கிழமை, 19 ஜூன் 2024      விளையாட்டு
Woman 2023-12-16

Source: provided

இந்தியா - தென்ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 325 ரன்கள் எடுத்தது. ஸ்மிருதி மந்தனா 136 ரன்களும் , ஹர்மன்பிரீத் கவுர் 103 ரன்களும் எடுத்தனர்.தொடர்ந்து 326 ரன்கள் இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி விளையாடியது.

கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை இந்திய அணியின் பூஜா வஸ்த்ரகர் வீசினார். கடைசி ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணியால் 6 ரன்கள் மட்டும் எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.தென் ஆப்பிரிக்கா அணியில் லாரா வால்வர்ட் 135 ரன்கள் எடுத்தார். 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2--0 என இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது. 

________________________________________________________________

மிதாலி ராஜ் சாதனை சமன் 

இந்தியா- தென்ஆப்பிரிக்கா பெண்கள் அணிகள் இடையே ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா சதம் விளாசினார். இது அவரின் 6-வது ஒருநாள் சதம் ஆகும். இந்த நிலையில் நேற்று 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியிலும் சதம் விளாசினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் விளாசிய இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சாதனையை சமன் செய்துள்ளார்.

மிதாலி ராஜ் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஏழு சதம், 64 அரைசதங்கள் அடித்துள்ளார். 27 வயதான ஸ்மிரிதி மந்தனா 84 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் ஏழு சதங்கள் அடித்துள்ளார். இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டனான ஸ்மிரிதி மந்தனா 27 அரைசதங்களும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________

கோலிக்கு ரஷித் கான் புகழாரம் 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுகள் நேற்று தொடங்கியது. குரூப் 1 பிரிவில் இடம்பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை இன்று இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரையிறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும் என்பதால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மல்லுகட்டுவது நிச்சயம்.

இந்நிலையில், விராட் கோலிக்கு பந்து வீசுவது மிகவும் கடினமானது என ரஷித் கான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ரஷித் கான் கூறுகையில், விராட் கோலிக்கு பந்துவீசுவது மிகவும் கடினமானது. அவர் எப்போதும் ரன்களைக் குவிப்பதற்கும் உங்கள்மீது அழுத்தம் கொடுப்பதற்கும் இடைவெளிகளைக் கண்டுபிடிப்பார். அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். அவருக்கு பந்து வீசுவது மிகவும் சவாலானது என தெரிவித்தார்.

________________________________________________________________

வங்கதேச வீரருக்கு அபராதம்

டி20 உலகக் கோப்பையில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் ஐசிசியின் விதிகளை மீறியதால் வங்கதேச வீரருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.நேபாளத்துக்கு எதிரான போட்டியில் 3ஆவது ஓவரில் இந்த சம்பவம் நடைபெற்றது. கிங்ஸ்டௌன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நேபாள அணியின் கேப்டன் (அணித் தலைவர்) ரோஹித் பௌடேல் உடன் வங்கதேச பந்து வீச்சாளர் தன்சிம் ஹாசன் ஷகிப் வாய் தகராறில் ஈடுபட்டார்.

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய 21 வயது தன்சிம் ஹாசன் ஷகிப் 4 விக்கெட்டுகள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். போட்டியின் நடுவர்கள் ஐசிசியின் விதிகளை மீறியதால் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவிகிதம் அபராதமாக விதித்தார்கள். இந்த அபராதத்தினை தன்சிம் ஹாசன் ஷகிப் ஏற்றுக்கொண்டுள்ளார். வங்கதேச அணி டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று (ஜூன் 20) ஆஸ்திரேலிய அணியுடன் சூப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

________________________________________________________________

ரோகித் சர்மாவுக்கு ஆதரவு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆக கவுதம் கம்பீர் பி.சி.சி.ஐ.-இடம் சில நிபந்தனைகளை முன்வைத்ததாகவும், அதற்கு ஒப்புக் கொண்டால் மட்டுமே பயிற்சியாளராக தான் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அடுத்த பயிற்சியாளர் விவகாரம் தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டதாகவும், இதில் கவுதம் கம்பீர் கலந்து கொண்டதாக தெரிகிறது. கவுதம் கம்பீர் தவிர மேலும் சிலர் இந்த நேர்காணலில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் விவகாரத்தில் கவுதம் கம்பீரின் பெயர் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

மேலும், 2027 உலகக்கோப்பை தொடர் வரை டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான இந்திய அணிக்கும் ரோகித் சர்மாவே கேப்டனாக தொடர வேண்டும் என்று கவுதம் கம்பீர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து