முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20யில் 2 முறை ஹாட்ரிக்: கம்மின்ஸ் உலக சாதனை

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2024      விளையாட்டு
Cummins 2024-05-26

Source: provided

பார்படாஸ் : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். 

முதல் ஹாட் ட்ரிக்.... 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதின. அப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இது நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் ஹாட் ட்ரிக் ஆக அமைந்தது. இந்த போட்டியில் மஹ்மதுல்லா, மஹெதி ஹாசன் மற்றும் தவ்ஹித் ரிடோய் ஆகியோரின் விக்கெட்டுகளை பேட் கம்மின்ஸ் எடுத்து அசத்தினார். 4 ஓவர்களை வீசிய பேட் கம்மின்ஸ் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆப்கானுக்கு எதிராக....

இதன்மூலம் டி20 உலகக் கோப்பை தொடரில் ஹாட் ட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது ஆஸ்திரேலிய வீரர் மற்றும் ஏழாவது சர்வதேச வீரர் என்ற பெருமையை பேட் கம்மின்ஸ் பெற்றார். இந்நிலையில், சூப்பர் 8 சுற்று போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அப்போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் தொடர்ந்து 2ஆவது முறையாக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான், கரீம் ஜனத் மற்றும் குல்பாதின் நைப் ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்றி இந்த சாதனையை படைத்துள்ளார். 

2 முறை ஹாட்ரிக்... 

இதன்மூலம், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் 2 முறை ஹாட்ரிக் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். ஆப்கானிஸ்தான் அணி வீரர் நங்கெயாலியா கொடுத்த கேட்ச் வாய்ப்பை வார்னர் தவறிவிட்டார். இதனால் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தும் வாய்ப்பை நூலிழையில் பேட் கம்மின்ஸ் இழந்தார்.

டி20 போட்டிகளில் 2 ஹாட்ரிக் விக்கெட்:

1. லசித் மலிங்கா (இலங்கை).

2. டிம் சவுதி (நியூசிலாந்து).

3. மார்க் பாவ்லோவிக் (செர்).

4. வசீம் அப்பாஸ் (மால்டா).

5. பேட் கம்மின்ஸ் (ஆஸ்.,).

டி-20 உலகக் கோப்பைகளில் ஹாட்ரிக் விக்கெட்:

1. பிரட் லீ (ஆஸி.,) - வங்கதேசம், கேப் டவுன், 2007.

2. கர்டிஸ் கேம்பர் (ஐயர்லாந்து) - நெதர்லாந்து, அபுதாபி, 2021.

3. வனிந்து ஹசரங்கா (இலங்கை) - தென்ஆப்பிரிக்கா, ஷார்ஜா, 2021.

4. காகிசோ ரபாடா (தென்ஆப்பிரிக்கா) எதிராக இங்கி., ஷார்ஜா, 2021.

5. கார்த்திக் மெய்யப்பன் (யூ.ஏ.இ.) - இலங்கை, கீலோங், 2022.

6. ஜோசுவா லிட்டில் (ஐயர்லாந்து) - நியூசிலாந்து, அடிலெய்டு, 2022.

7. பேட் கம்மின்ஸ் (ஆஸி.,) - வங்கதேசம், ஆன்டிகுவா, 2024.

8. பேட் கம்மின்ஸ் (ஆஸி.,) - ஆப்கான், கிங்ஸ்டவுன், 2024.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 weeks 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து