முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ககனாச்சாரி (மலையாளம்) விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஜூலை 2024      சினிமா
Kaganachari 2024-07-08

Source: provided

2050-ம் காலக்கட்டத்தில் கதை நடக்கிறது. மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், உள்ளிட்டவைகளால் அச்சத்தோடு வாழும் மக்களை, கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை காவல்துறையும் கண்காணிக்கிறது. இப்படி ஒரு காலக்கட்டத்தில், ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் எதிர்கால அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ள பாதுகாப்பான கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள். 

ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக சேனல் ஒன்று அவரை சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள். ஆவணப்படம் எடுப்பதற்கான அவர்களின் உரையாடல்களையும், அதைச் சார்ந்த காட்சிகளும் ஆவணப்பட கோணத்தில் திரையில் விரிகிறது.

கடினமான சூழலில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த மூன்று ஆண் நபர்களுடன் ஒரு பெண் ஏலியன் இணைகிறது. 250 வயதாகும் அந்த ஏலியன் மீது, இதுவரை எந்த பெண்ணும் தன்னை திரும்பி கூட பார்க்கவில்லை என்று கவலைப்படும், 25 வயதாகும் கோகுல் சுரேஷுக்கு காதல் மலர்கிறது. அந்த காதல் காமெடியாக பயணித்தாலும், மறுபக்கம் செயற்கை நுண்ணறிவின் நன்மை மற்றும் தீமை, காலநிலை மாற்றத்தால் நாட்டில் அடிக்கடி ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, பெட்ரோல் தட்டுப்பாடு, ஏலியன் உலகத்திற்கும் மனித இனத்திற்கும் உள்ள தொடர்பு என பல்வேறு விசயங்கள் பற்றி பேசும் இயக்குநர் இறுதியில், ஏலியன் பெண்ணுடனான காதல் என்ன ஆனது?, பூமியில் நடக்கும் ஏலியன் தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையை, ஆவணப்படத்தில் இருந்து வெளிவந்து திரைப்பட பாணியில் சொல்வது தான் ‘ககனாச்சாரி’. மொத்தத்தில், இந்த ‘ககனாச்சாரி’ பொழுதுபோக்கு திரைப்படம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து