முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்க் விமர்சனம்

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      சினிமா
Park-review 2024 08 12

Source: provided

கதையின் நாயகன் தமன்குமார் மற்றும் நாயகி ஸ்வேதா டோரத்தி இருவரையும் ரவுடி கூட்டம் துரத்துகிறது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக நீண்ட நாட்களாக பூட்டப்பட்டு கிடக்கும் பூங்காவிற்குள் (பார்க்) நுழைகிறார்கள். அங்கு ரவுடிகளை விடவும் பெரிய ஆபத்து அவர்களை ஆட்கொள்கிறது. அதனால் எப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை கலகலப்பாகவும், கதறும்படியும் சொல்வது தான் ‘பார்க்’

நடிகர் தமன்குமார், இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் பார்வையாளர்களை பயமுறுத்தியிருக்கிறார். நாயகியை கண்டதும் காதல், டூயட், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்து கமர்ஷியல் விசயங்களிலும் பட்டய கிளப்பியிருப்பவர், ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தி மிரட்டவும் செய்திருக்கிறார். 

வழக்கமான திகில் கதைதான் என்றாலும், அதற்காக இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் பூங்கா என்ற களம் புதிதாகவும், அதை காட்சிப்படுத்திய விதம் மிரட்டலாகவும் இருக்கிறது. சிறிய விசயத்தை வைத்துக்கொண்டு காதல், காமெடி, ஆக்‌ஷன், செண்டிமெண்ட், திகில் என அனைத்து விசயங்களையும் அளவாக கையாண்டிருக்கும் இயக்குநர் இ.கே.முருகன், அனைத்து தரப்பினருக்குமான ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுத்ததில் வெற்றி பெற்றிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘பார்க்’ சிறப்பு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து