முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 18-ம் தேதி கல்யாண உற்சவம் ரத்து

செவ்வாய்க்கிழமை, 13 ஆகஸ்ட் 2024      ஆன்மிகம்
Tirupati-Brahmotsava-festiv

Source: provided

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 18-ம் தேதி கல்யாண உற்சவ சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து  திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 15-ம் தேதியில் இருந்து 17-ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடக்கிறது. இதை முன்னிட்டு 17-ம் தேதி இரவு வரை கோவில் சம்பங்கி பிரகாரத்தில் வேத நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடக்கின்றன.  ஆகையால் 18-ம் தேதி கல்யாண உற்சவத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. பக்தர்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பவித்ரோற்சவம் நடைபெறும் 3 நாட்களிலும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இன்று 14-ம் தேதி சஹஸ்ர தீபலங்கார சேவை, நாளை 15-ம் தேதி திருப்பாவாடை சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து