முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி: மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2024      விளையாட்டு
Mansukh-Mantavia-2023-04-26

Source: provided

புதுடெல்லி : 2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

2010-ம் ஆண்டு...

யூத் ஒலிம்பிக் போட்டிகள் என்பது உலகம் முழுவதிலுமிருந்து 15 முதல் 18 வயது வரையிலான இளைஞர்களுக்கான ஒரு விளையாட்டு நிகழ்வு ஆகும். இந்த தொடர் கடந்த 2010ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதல் தொடர் சிங்கப்பூரில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சீனா (2014), அர்ஜெண்டினாவில் (2018) தொடர் நடத்தப்பட்டது.

4வது பதிப்பு... 

இந்த தொடரின் 4வது பதிப்பு 2026ம் ஆண்டு செனகலில் அக்டோபர் 31ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 5வது இளையோர் ஒலிம்பிக் போட்டிகள் 2030ம் ஆண்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2030ம் ஆண்டு நடைபெற உள்ள இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளதாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.

முன்னோடியாக... 

இது தொடர்பாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் கூட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாவது, 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு முன்னோடியாக 2030 இளையோர் ஒலிம்பிக் போட்டி தொடரை நடத்த இந்தியா ஏலம் கேட்க உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நாங்கள் 2030 இளையோர் ஒலிம்பிக்கிற்கு ஏலம் எடுக்கப் போகிறோம். அதே சமயம், 2036 ஒலிம்பிக் தொடரை நடத்துவதில் எங்கள் கவனம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து