முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தல்: கமலா ஹாரிஸ் - டிரம்ப் இன்று நேரடி விவாதம்

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      உலகம்
Kamala-Harris---Trump-2024-

வாஷிங்டன், கமலா ஹாரிஸ்-டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இந்த நிலையில் கமலா ஹாரிஸ்-டிரம்ப் பங்கேற்கும் நேரடி விவாத நிகழ்ச்சி இந்திய நேரப்படி இன்று காலை 6.30 மணிக்கு நடக்கிறது. 

பென்சில்வேனியா மாகாணம் பிலடெல்பியாவில் நடக்கும் இந்த விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி ஊடகம் ஏற்பாடு செய்து உள்ளது. விவாத நிகழ்ச்சியை ஏ.பி.சி தொகுப்பாளர்கள் டேவிட் முயர், லின்சி டேவிஸ் ஆகியோர் தொகுத்து வழங்குகிறார்கள். 90 நிமிட விவாதம் நடைபெறும். இடையில் 2 இடைவேளை விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வேட்பாளரின் மைக்ரோபோனும் அவர்கள் பேசும் முறை மட்டுமே நேரலையில் இருக்கும். மற்ற வேட்பாளரின் நேரம் இருக்கும் போது அணைக்கப்படும் என்றும், எந்தவொரு தலைப்புகளும் கேள்விகளும் வேட்பாளர்களுடன் முன்கூட்டியே பகிரப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோபைடன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஜூன் 27-ம் தேதி ஜோ பைடனுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நேரடி விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஜோபைடன் மிகவும் திணறினார். இதனால் அவருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தனது உடல்நிலை காரணமாக தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார். 

அதன்பின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கும் டிரம்ப்புக்கும் இடையே நடைபெறவிருக்கும் முதல் நேரடி விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகள், தங்களது எதிர்கால திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து பேச உள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து