எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி டி.வி. நேரலையில் டிரம்ப் - கமலா ஹாரிஸ் இடையே அனல் பறந்த விவாதம் நடைபெற்றது. இதில் அமெரிக்கப் பொருளாதார நிலவரம் முதல் கருக்கலைப்புச் சட்டம் வரை விவாதம் நடைபெற்றது.
வரும் நவம்பர் 5-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான கமலா ஹாரிஸ் - டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதத்தை அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏ.பி.சி ஊடகம் ஏற்று நடத்தியது.
விவாதத்தைத் தொடங்கிய ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், டிரம்ப் ஆட்சியின் கீழ் தான் அமெக்கா மிகப் பெரிய வேலைவாய்ப்பின்மை சிக்கலை எதிர்கொண்டது. அமெரிக்க பொருளாதாரத்தின் பெரும் மந்தநிலை காலத்துக்குப் பின்னர் மோசமான வேலைவாய்ப்பின்மை சிக்கல் டிரம்ப் ஆட்சியில் தான் நிகழ்ந்தது. நான் அதிபரானால் அந்த நிலை மாற்றப்படும். அமெரிக்காவில், வேலைவாய்ப்புகளைத் தரும் பொருளாதாரத்தை கட்டமைக்க விரும்புகிறேன். அமெரிக்காவில் வீட்டு வசதியை கையடக்க விலைக்குக் கொண்டு வருவேன். குழந்தை வரிக்கடன் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். டிரம்ப் அதிபரானால் அவர் டிரம்ப் சேல்ஸ் டேக்ஸ் கொண்டு வருவார்.
அதாவது அன்றாடம் நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 20 சதவீதம் வரி விதிக்கப்படும். கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் டிரம்ப் ஏற்படுத்தி வைத்திருந்த பொருளாதார சீரழிவுகளை பைடன் சரிசெய்துள்ளார். டிரம்புக்கு உங்களுக்கான திட்டம் என்று எதுவும் இல்லை. அவர் எப்போதும் அவரை தற்காத்துக் கொள்வதிலேயே முனைப்பு காட்டுவார் என்றார். ஆனால் இதனை மறுத்த டிரம்ப், தனது ஆட்சிக் காலத்தில் தான் அமெரிக்கப் பொருளாதாரம் மிக செழிப்பாக இருந்தது என்றார்.
கருக்கலைப்பு உரிமைகள் பற்றி பேசுகையில், டிரம்ப் அதிபரானால் தேசம் தழுவிய கருக்கலைப்பு தடை அமலுக்கு வரும். பாலியல் வன்கொடுமைகள், நெருங்கிய குடும்ப உறவுகளுக்கு இடையேயான தகாத பாலுறவு மூலம் உருவாகும் கருவினை கலைப்பது கூட டிரம்ப் ஆட்சி அமைந்தால் கடினமாகி விடும். அதனால் டிரம்ப்பை ஆதரிக்கக் கூடாது என்று கமலா ஹாரிஸ் கூறினார். அப்போது டிரம்ப், சில மாகாணங்களில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொல்லப்படுகின்றனர். ஜனநாயகக் கட்சி 9-வது மாதத்தில் கூட கருக்கலைப்பை அனுமதிக்க வேண்டும் என விரும்புகிறது என்றார்.
அப்போது குறுக்கிட்ட நெறியாளர் அமெரிக்காவில் குழந்தைகள் பிறந்த பின்னர் கொலை செய்யப்படுவதை எந்த மாகாண சட்டமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்து 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 3 பேர் டிரம்பால் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்று கமலா ஹாரிஸ் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து சட்டவிரோத குடியேற்றம் அமெரிக்காவுக்கு சவாலாக இருப்பதாக கூறிய டிரம்ப், அவ்வாறு குடியேறுபவர்கள் ஓஹியோ நகரவாசிகளின் செல்லப் பிராணிகளை வதைத்து உணவாக்கிக் கொள்வதாகக் கூறினார். அதற்கு நெறியாளர் குறுக்கிட்டு அப்படியான செய்திகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று தெரிவித்தார்.
ரஷ்யா - உக்ரைன் போர்: ரஷ்யா - உக்ரைன் போர் 31-வது மாதமாக நீடித்து வரும் நிலையில் அது குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ், எங்களுக்கும் ஜெலன்ஸ்கிக்கும் இடையே நல்லுறவு இருக்கிறது. நல்லவேளை இந்த போர் மூண்ட தருணத்தில் நீங்கள் (டிரம்ப்) அதிபராக இருக்கவில்லை. இல்லாவிட்டால் இந்நேரம் புடின், கீவ் நகரில் அமர்ந்து கொண்டு ஐரோப்பிய நாடுகளை எப்படித் தாக்குவது என்று திட்டம் தீட்டிக் கொண்டு இந்திருப்பார். புடின் ஒரு சர்வாதிகாரி. அவர் உங்களை மதிய உணவாக புசித்து விடுக்கூடும் என்று எச்சரித்தார். அதற்குப் பதிலளித்த டிரம்ப், கமலா ஹாரிஸ் தான் அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான துணை அதிபர். உக்ரைன் - ரஷ்ய போரை அவர் தடுக்கத் தவறி விட்டார் என்றார்.
அதை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலில் 40 ஆயிரம் பாலஸ்தீனர்கள் இறந்து விட்டனர். நான் மட்டும் அதிபராக இருந்திருந்தால் இந்தப் போர் மூண்டிருக்காது. கமலா ஹாரிஸுக்கு இஸ்ரேல் மீது கடும் வெறுப்பு உண்டு. அவர் அமெரிக்க அதிபரானால் இரண்டு ஆண்டுகளில் இஸ்ரேல் என்ற நாடே இல்லாமல் போகி விடும் என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை நான் மறுக்கிறேன். அவர் பிரச்சினையை திசைதிருப்பி, பிரித்தாள முயற்சிக்கிறார். அவருக்கு எப்போதுமே சர்வாதிகாரிகள் மீது அபிமானம் உண்டு என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தன்னையே ஒரு சர்வாதிகாரியாகப் பார்க்கவே விரும்புகிறார் என்று கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்தார். இவ்வாறாக ட்ரம்ப் - ஹாரிஸ் நேரடி விவாதம் களை கட்டியது. இந்த விவாதத்துக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |
-
வடமேற்கு வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது: தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை தொடரும்
12 Oct 2024சென்னை, அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வு நிலை ஏற்கனவே உருவாகியுள்ள நிலையில், நாளை வங்கக்கடலிலும் காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு
-
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகத்தில் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிப்பு: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்
12 Oct 2024சென்னை, தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக தெரிவித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
-
18 வயதிற்கு மேற்பட்டவர்கள் முறைகேடாக ஆதார் அட்டை பெறுவதை தடுக்க விரைவில் புதிய நடைமுறை அமல்
12 Oct 2024புதுடெல்லி, இந்தியாவில் ஒருங்கிணைந்த அடையாள அட்டையாக ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை ஆதார் மையங்களில் பொதுமக்கள் விண்ணப்பித்து அட்டையை பெற முடியும்.
-
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை ரயில் விபத்திற்கு 'சதி' காரணமா? என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் விசாரணை
12 Oct 2024சென்னை, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் ‘சதி திட்டம்’ ஏத
-
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை கோவில் நடை 16-ம் தேதி திறப்பு
12 Oct 2024சபரிமலை : ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வரும் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
-
உத்தரகாண்ட் சிறையில் நடந்த நவராத்திரி விழா: ராம்லீலா நாடகத்தில் நடித்த 2 கைதிகள் தப்பியோட்டம்
12 Oct 2024ஹரித்வார் : நவராத்திரி விழாவை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் சிறையில் நடந்த ராம்லீலா நாடகத்தில் வானரங்களாக வேடமிட்டு நடித்த 2 கைதிகள் சீதையை தேடுவதுபோல் நைசாக
-
டி-20 போட்டியில் 2-வது அதிகபட்ச ரன்கள் : இந்திய அணி புதிய சாதனை
12 Oct 2024ஐதராபாத் : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதமடித்து அசத்திய நிலையில், இந்திய அணி 297 ரன்களை பதிவுசெய்து டி-20 போட்டிகளில் 2-வது அதிகபட்ச
-
இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல்
12 Oct 2024ராமேசுவரம், இலங்கை கடற்படையால் கடந்த 10 ஆண்டுகளில் 3,288 தமிழக மீனவர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் தெரியவந்துள்ளது.
-
திருவள்ளூர் ரெயில் விபத்து: 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன்
12 Oct 2024சென்னை : திருவள்ளூர் ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த 13 பிரிவு அதிகாரிகளுக்கு தெற்கு ரெயில்வே சம்மன் அனுப்பியுள்ளது
-
அரியானா சட்டசபை தேர்தல்: 20 தொகுதி காங். வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார்
12 Oct 2024சண்டிகர் : அரியானா சட்டசபை தேர்தலில் 20 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.
-
சவரனுக்கு ரூ.200 உயர்வு: மீண்டும் ரூ.57 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை
12 Oct 2024சென்னை, சவரனுக்கு ரூ.200 உயர்ந்து மீண்டும் ரூ.57 ஆயிரத்தை ஒரு சவரன் தங்கம் விலை நெருங்கியுள்ளது.
-
பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைப்பு: திருத்தப்பட்ட கல்வியாண்டு புதிய நாட்காட்டி வெளியீடு
12 Oct 2024சென்னை, பள்ளி வேலை நாட்கள் 210 தினங்களாக குறைக்கப்பட்ட திருத்தப்பட்ட புதிய கல்வியாண்டு நாட்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
-
சென்னை, பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்
12 Oct 2024சென்னை : சென்னை பூந்தமல்லி அருகே வீட்டில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விஜய தசமியில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம்
12 Oct 2024சென்னை, விஜய தசமியை முன்னிட்டு நேற்று அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டினர்.
-
ஆட்சி அமைக்க உரிமை கோரினார்: காஷ்மீர் முதல்வராக விரைவில் பதவியேற்கிறார் உமர் அப்துல்லா
12 Oct 2024ஜம்மு : காஷ்மீரில் ஆட்சி அமைக்க உரிமை கோரி துணை நிலை கவர்னரை தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா சந்தித்தார்.
-
ரவுடி புதூர் அப்பு மீது குண்டாஸ்
12 Oct 2024சென்னை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி புதூர் அப்பு மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
-
குஜராத்தில் நடந்த சோகம்: கட்டுமான பணியிடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
12 Oct 2024மெஹ்சானா : குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்துக்கு அருகில் கட்டுமானப் பணி நடந்து வந்த இடத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.&nbs
-
சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் : தலைமை செயலாளர் முருகானந்தம் பேச்சு
12 Oct 2024சென்னை : சென்னையை பூங்காக்களின் நகரமாக தமிழக அரசு மாற்றும் என்று தலைமை செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார்
-
தமிழ்நாட்டிற்கு கல்விக்கான நிதி விடுவிக்கப்படுவது எப்பொழுது? மத்திய அமைச்சர் எல்.முருகன் விளக்கம்
12 Oct 2024சென்னை, மத்திய அரசின் கேள்விகளுக்கு பதிலளித்தால் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரம்: 8-வது நாளாக தொடர்ந்த பயிற்சி டாக்டர்களின் உண்ணாவிரதம்
12 Oct 2024கொல்கத்தா : கொல்கத்தா பெண் மருத்துவர் விவகாரத்தில் நீதிவேண்டி நேற்று 8-வது நாளாக பயிற்சி டாக்டர்களின் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது.
-
இந்திய டெஸ்ட் அணி துணை கேப்டனாக பும்ரா நியமனம்
12 Oct 2024மும்பை : நியூஸிலாந்து அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குமரியில் அலைமோதிய கூட்டம்
12 Oct 2024கன்னியாகுமரி : விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நேற்று அதிகரித்து காணப்பட்டது.
-
கவரப்பேட்டை ரெயில் விபத்து குறித்து வெளியான புதிய தகவல்
12 Oct 2024சென்னை, மைசூரில் இருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நில
-
கவரப்பேட்டை ரயில் விபத்து: சீரமைப்புப் பணிகள் தீவிரம்: இன்று காலை முதல் ரெயில் சேவை மீண்டும் தொடங்கும்
12 Oct 2024திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நேரிட்ட ரயில் விபத்தால் சீர்குலைந்திருக்கும் தண்டவாளங்களை சீரமைக்குப் பணி துரித கதியில் நடைபெற்று வருக
-
மீண்டும் இந்திய அணியில் ஆஸி.,க்கு எதிரான தொடரில் இணைகிறார் முகமது ஷமி
12 Oct 2024புதுடெல்லி : நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம் பெறவில்லை என்றும் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில