முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மது போதையில் மாணவன் மீது தாக்குதல்: பிரபல பாடகர் மனோவின் மகன்கள் தலைமறைவு?

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      சினிமா
Mano 2024-09-11

Source: provided

சென்னை : மதுபோதையில் மாணவன் மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர், மது போதையில் கல்லூரி மாணவர் மற்றும் சிறுவன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் காயமடைந்த மாணவர்கள் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து,  பாடகர் மனோவின் மகன்களான சாஹீர், ரபிக் மற்றும் அவர்களின் நண்பர்களான விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோர் மீது வளசரவாக்கம் போலீசார் கொலை மிரட்டல், தாக்குதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதனையடுத்து, விக்னேஷ் மற்றும் தர்மா ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாஹீர், ரபிக் ஆகியோர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 2 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 2 months ago
View all comments

வாசகர் கருத்து