முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வருக்கு விருப்பமில்லை: ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி பேட்டி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      தமிழகம்
Muthusamy 2023-07-27

ஈரோடு, டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்று தான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

  ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று 5 புதிய பஸ் சேவைக்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு  புதிய பஸ் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. டாஸ்மாக் கடைகளை என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். 

ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் என்ன ஒரு சூழல் உருவாகும் என எல்லோருக்கும் தெரியும்.  இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை மதுவிலிருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். 

ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை, அவர்கள் அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவிற்காக மாநாடு நடத்துகிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசை எதிர்த்து போராடுகிறார்கள் என்பது அல்ல. கல்யாணத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்கள். எதிரிகளுக்கு கூட தான் அழைப்பு விடுக்கிறோம். 

வி.சி.க. மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார். முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பவற்றை தொடர்ந்து கவனித்து வருகிறார். இவ்வாறு முத்துசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து