முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவர்கள் போராட்டம்: மக்களுக்காக நான் ராஜினாமா செய்ய தயார்: மமதா பானர்ஜி

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      இந்தியா
Mamtha 2024-09-03

கொல்கத்தா, கொல்கத்தா மருத்துவர்களின் போராட்ட விவகாரத்தில் மக்களுக்காக ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி, மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மருத்துவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டும் வரும் முயற்சியில் மேற்கு வங்க அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், மருத்துவர்களுடன் அரசின் 32 பேர் கொண்ட குழு பேச்சு வார்த்தை திறந்த வெளியில் நடத்த நேற்று திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பேசியதாவது, ``மருத்துவர்களுக்கு நாங்கள் கடிதம் எழுதியிருந்தோம், அவர்கள் வருவார்கள் என்றும் சொன்னார்கள். ஆனால், அவர்கள் இரண்டு மணி நேரமாக வரவில்லை. இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என்பதால், அதனை நேரடி ஒளிப்பரப்பாகக் காட்ட முடியாது’’ என்று தெரிவித்தார்.

மேலும், இளம் மருத்துவர்களின் பணி நிறுத்தத்தால், 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 லட்சம் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், போராட்டம் செய்யும் மருத்துவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது; ஆர்.ஜி. கர் பிரச்னை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த மக்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். கொலை செய்யப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டும். மக்களுக்காக, நான் ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து