முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: சச்சின் சாதனையை முறியடிக்க விராட்கோலிக்கு அதிக வாய்ப்பு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2024      விளையாட்டு
Virat-Kohli 2023 07-22

சென்னை, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வீராட் கோலி முறியடிக்கவுள்ளார்.

இன்னும் 58 ரன்கள்...

வங்கதேசத்துக்கு எதிராக வருகின்ற 19-ம் தேதி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி, வெறும் 58 ரன்கள் எடுத்தால் புதிய உலக சாதனை படைப்பார். 147 ஆண்டுகள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக குறைந்த போட்டிகளில்(623) 27,000 சர்வதேச ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். இந்த நிலையில், இந்திய வீரர் விராட் கோலி, இதுவரை 591 போட்டிகளில் விளையாடி, 26,942 ரன்களை குவித்துள்ளார். இன்னும் 58 ரன்கள் எடுத்தால் போது சச்சினின் சாதனை முறியடிக்கப்படும்.

முதல் வீரர் ஆவார்... 

அடுத்து வரக்கூடிய 8 போட்டிகளில் 58 ரன்களை விராட் கோலி எடுக்கும் பட்சத்தில், கிரிக்கெட் வரலாற்றில் 600 போட்டிகளிலேயே 27,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார். சச்சின் டெண்டுல்கரை தவிர, ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் மற்றும் இலங்கையின் சங்ககரா ஆகியோர் சர்வதேச போட்டிகளில் 27,000 ரன்களை கடந்துள்ளார்கள்.

அதிக சதங்கள்...

ஏற்கெனவே, ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதம் அடித்த சச்சின்(49) சாதனையை விராட் கோலி(50) முறியடித்துள்ளார். இருப்பினும், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சச்சின் 100 சதங்களை அடித்துள்ள நிலையில், இதுவரை விராட் கோலி 80 சதங்களை அடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து