முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனசேனா கட்சியில் இருந்து டான்ஸ் மாஸ்டர் ஜானி நீக்கம்

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2024      சினிமா
Johnny 2024-03-10

Source: provided

ஆனந்த்பூர் : பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டார்.

தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா பெண்ணே' பாடலுக்கு தேசிய விருது பெற்றவர் நடன இயக்குநர் ஜானி. விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே', ரஜினியின் காவாலா போன்ற ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்து கொடுத்தவர். இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் நடன இயக்குநர் ஜானி மீது ஆந்திர மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஐதராபாத், சென்னை, மும்பை என ஷூட்டிங் சென்ற இடங்களில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆந்திர மாநிலத்தில் பெண் திரைப்பட கலைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இளம்பெண் அளித்த பாலியல் புகார் எதிரொலியாக ஜனசேனா கட்சியில் இருந்து ஜானி மாஸ்டர் நீக்கப்பட்டுள்ளார். ஜானி மீது ராயதுர்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து ஜனசேனா தலைமை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக ஜனசேனா கட்சி தனது எக்ஸ் வலைதளத்தில், "ஜனசேனா கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருக்க ஜானிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் மீது ராயதுர்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, கட்சித் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது" என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து