முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு அண்ணாமலை வேண்டுகோள்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
Annamalai 2024-01-16

Source: provided

சென்னை : நமது இலக்கை அடையும் வகையில் புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை மேலும் தீவிரப்படுத்த தமிழக பா.ஜ.க.வினருக்கு மாநில தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ளார். அதனால் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டள்ள மூத்த தலைவர் எச்.ராஜா கட்சியில் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். 

இந்நிலையில், அண்ணாமலை லண்டனில் இருந்தபடி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அன்பு தலைவர்களே, தொண்டர்களே, நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். அனைவரும் நிச்சயமாக நன்றாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கட்சி பணியும் சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன். அருமை சொந்தங்களே, கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக களத்தில் கடுமையாக உழைத்து கொண்டிருக்கிறீர்கள்.

இந்த நேரத்தில் உங்களிடம் நான் வைக்கும் அன்பான கோரிக்கை என்னவென்றால் நாம் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். காரணம் நமது இலக்கு மிகப்பெரிய இலக்கு ஒரு பூத்தில் குறைந்தது 200 சொந்தங்கள் இணைய வேண்டும். இது பெரிய இலக்காக இருந்தால் கூட நிச்சயம் நம்மால் செய்து காட்டக்கூடிய இலக்கு. 

நம்மால் நிச்சயமாக செய்ய முடியும் என்ற நம்பிக்கையோடு நம்முடைய கட்சி தலைமை அளித்திருக்கக் கூடிய இலக்கு. புதியவர்களை இணைக்கும் பணியே தான் நாம் முக்கிய கட்சி பணியாக வைத்திருக்கிறோம். இதனால் வேறு எந்த கட்சி பணியும் செய்யவில்லை. 

அதனால் இந்த நேரத்தில் இந்த குழுவின் பொறுப்பாளராக இருக்கக்கூடிய மூத்த தலைவர் எச்.ராஜா முனைப்போடு செயல்பட்டு வருகிறார். எல்லோரும் அவரோடு கைகோர்த்து களத்தில் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை அந்த பதிவில் கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து