முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தொய்வின்றி சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டும் அமைச்சர் சிவசங்கர் தகவல்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2024      தமிழகம்
Sivashankar 2023-05-08

Source: provided

சென்னை; சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படும் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளில், ஏற்கனவே நடைமுறையில் உள்ளவாறு அனுமதிக்கவும், எந்தவித தொய்வுமின்றி முறையாக இந்த சிறப்பு பயணச் சலுகைகளை வழங்க வேண்டுமென்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், 

நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் விருதாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், தமிழகம் முழுவதும் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பேருந்துகளில் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர் வயது முதிர்வு காரணமாக, தனியாக பேருந்தில் பயணம் செய்திட இயலாத நிலையில், உடன் பயணிக்கும் உதவியாளருக்கும் பேருந்துகளில் கட்டணமில்லா பயண சலுகைகள் குறித்து 2010, 2020 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், 01.06.2024 முதல் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் கட்டணமில்லா பயண சலுகை இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. மேற்குறிப்பிட்டுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை முறையாக நடத்துநர்கள் பின்பற்றவில்லை எனத் தெரியவருகிறது.

தமிழக முதல்வர் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் மொழி, தமிழ் வளர்ச்சி மற்றும் தமிழ் பண்பாட்டிற்கு பெருந்தொண்டாற்றிய தமிழறிஞர்கள் உள்ளிட்டோர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள காரணத்தால், இனிவரும் காலங்களில் பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளும் வகையில் அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்களுக்கும், உயர் அலுவலர்களுக்கும் மற்றும் ஓட்டுநர் / நடத்துநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 

இனிவரும் காலங்களில், பயனாளிகள் எவ்வித சிரமமின்றி, பேருந்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து