முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை சேர்ந்த 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிப்பு

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2024      உலகம்
nobaol

Source: provided

ஸ்டாக்ஹோம்: பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டதற்காக மூவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் 7-ந்தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. முதல் நாளில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையிலொ நேற்று பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது.

ஒரு அமைப்பு எப்படி உருவாகின்றன.. அவை எப்படி ஒரு நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு காரணமாக இருக்கிறது, நிலையான வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் ஆகிவை குறித்து இவர்கள் விரிவான ஆய்வுகளை செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து