முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண் கைது

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Jail 2024 08 09

Source: provided

லக்னோ : உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளம்பெண்ணை நேற்று போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மும்பை காவல்துறையின் போக்குவரத்து பிரிவின் வாட்ஸ் அப் எண்ணுக்கு தெரியாத எண்ணில் இருந்து நேற்று முன்தினம் மாலை ஒரு மிரட்டல் செய்தி வந்தது. அந்தச் செய்தியில் யோகி ஆதித்யநாத் இன்னும் பத்து நாட்களுக்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் பாபா சித்திக் போல அவர் கொல்லப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தச் செய்தியை அனுப்பியது யார் என்று போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.  என்றாலும் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இந்த மிரட்டல் செய்தியினைத் தொடர்ந்து உத்தரப் பிரதேச முதல்வரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

இந்த நிலையில்  முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 24 வயது பெண் ஒருவர் நேற்று  கைது செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கைது செய்யப்பட்ட பெண் பாத்திமா கான் என்பது தெரியவந்துள்ளது. பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் படித்துள்ள அப்பெண் தனது குடும்பத்தினருடன் மகராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்துக்கு அருகே உள்ள உல்காஸ்நகர் பகுதியில் வசித்துவருகிறார். அவரது தந்தை மர வியாபாரம் செய்து வருகிறார்.

அப்பெண் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர். முதல்வருக்கு வந்த மிரட்டல் செய்தி குறித்த விசாரணையின் போது பாத்திமா கான் அந்த செய்தியை அனுப்பியது தெரியவந்தது. மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் உல்காஸ்நகர் போலீசார் இணைந்து நடந்திய விசாரணையில் அப்பெண்ணைக் கண்டுபிடித்து கைது செய்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து