முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசனில் இனி ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியம் : ஜார்க்கண்ட் முதல்வர் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      இந்தியா
Hemant-Soran 2024-07-08

Source: provided

ராஞ்சி : ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என்று ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக (நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20) சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முந்தைய பா.ஜ.க. ஆட்சியின் போது 11 லட்சம் ரேசன் கார்டுகள் நீக்கப்பட்டன. இதன் காரணமாக ஏராளமான பழங்குடியின மக்கள், தலித் மக்கள் பசி பட்டினியால் உயிரிழந்தனர். எங்கள் ஆட்சியில், ஒவ்வொருவரும் தங்கள் உரிமைகளுக்கு ஏற்ப ரேசன், பென்சன் மற்றும் ஊட்டச்சத்து பெறுகிறார்கள். 

மாநிலத்தில் மீண்டும் எங்கள் அரசு (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு) அமைந்தவுடன், பொது விநியோகத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும். கூடுதலாக 10 லட்சம் பேர் பொது விநியோக திட்டத்தில் சேர்க்கப்படுவார்கள். 

மையன் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதி வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவில் பழங்கள் மற்றும் முட்டைகளும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து