எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ஷார்ஜாவில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது . அந்த அணியின் குர்பாஸ் 5 ரன்களுக்கும் , செட்குல்லா அடல் 21 ரன்களுக்கும், ரஹ்மத் 2 ரன்களுக்கும் , அஸ்மத்துல்லா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் முகமது நபி, ஷாஹிதி இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர் தொடர்ந்து நிலைத்து விளையாடி இருவரும் அரைசதம் அடித்தனர் .
இறுதியில் ஆப்கானிஸ்தான் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 235 ரன்கள் எடுத்தது. நபி 84 ரன்கள் , ஷாஹிதி 52 ரன்கள் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் முஸ்தாபிசுர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 236 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்காளதேச அணி ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் 34.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 10 விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.இதன் மூலம் 92 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் அல்லா கசன்ஃபர் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
ரிஷப் பண்ட் குறித்து கம்மின்ஸ்
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது. இதையடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (பார்டர்-கவாஸ்கர் தொடர்) தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 22ம் தேதி தொடங்குகிறது. பார்டர்-கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இருப்பார் என முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் சும்மின்ஸ் கூறியதவாது , ரிஷப் பண்ட் போட்டியில் வேகமான மாற்றத்தை ஏற்படுத்துபவர். ஆஸ்திரேலியாவில் அவர் இறுதியாக விளையாடியபோது அது அவருக்கு நல்ல தொடராக அமைந்தது. அவர் களத்தில் இருப்பது எங்கள் அணிக்கு ஆபத்தானது என்று எங்களுக்கு தெரியும். எனவே பார்டர் - கவாஸ்கர் தொடரில் அவரின் விக்கெட்டை விரைவில் வீழ்த்த நாங்கள் முயற்சி செய்வோம். எங்களிடம் சில நல்ல திட்டங்கள் உள்ளன. என தெரிவித்துள்ளார்
தொடரை வென்ற மே.இ.தீவுகள்
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் இரு ஒருநாள் போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. இந்நிலையில், ஒருநாள் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் களம் இறங்கினர்,
இதில் பில் சால்ட் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் ஜேக்ஸ் 5 ரன், ஜோர்டன் காக்ஸ் 1 ரன், லிவிங்ஸ்டன் 6 ரன், சாம் கர்ரன் 40 ரன் எடுத்து அவுட் ஆகினர். தொடர்ந்து மவுஸ்லி, பில் சால்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் இருவரும் அரைசதம் அடித்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சால்ட் 74 ரன்னிலும், மவுஸ்லி 57 ரன்னிலும் அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 43 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 8விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் ஒருநாள் தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
கேப்டனுடன் அல்ஜாரி வாக்குவாதம்
இங்கிலாந்து - மேற்கிந்திய தீவு அணிகள் மோதிய மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பில் சால்ட் 74 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 43 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது மட்டுமின்றி தொடரையும் கைப்பற்றியது. பிரண்டன் கிங் 102 ரன்களும், கீசி கார்ட்டி 128 ரன்களும் எடுத்தனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப் 10 ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டனுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.முதலாவது இன்னிங்ஸில் 4 வது ஓவரின் போது இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது அல்ஜாரி ஜோசப் பவுலிங் செய்யவந்தபோது இரண்டு பேர் ஸ்லிபில் இருந்தனர். அல்ஜாரி ஜோசப் முதல் பந்தை வெளியே வீசினார். பேட்டர் அதை அடிக்கவில்லை. அடுத்த பந்தின் போது ஸ்லிப் இருந்த வீரரை பாய்ண்ட் திசையில் நிற்க வைத்துள்ளார் கேப்டன் கோப். இதனால், கேப்டனுக்கும், அல்ஜாரி ஜோசப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அந்த ஓவரை மெய்டன் ஓவராக வீசினார். பீல்டிங் செட் செய்வது குறித்து கேப்டன் ஷாய் கோப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அல்ஜாரி ஜோசப் எதுவும் தெரிவிக்காததால் பாதியிலேயே மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
- புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு : தற்காலிக மறு சீரமைப்புப்பணிகளுக்காக 6,675 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தல்
- தமிழகம் எதிர்கொள்ளும் பல்வேறு சவால்கள்: மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் : மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தல்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்2 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 1 week ago |
-
ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ. 3.22 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு
06 Dec 2024சென்னை: ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையை மேம்படுத்த ரூ. 3.22 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது: தமிழகத்தில் டிச.11, 12-ல் கனமழைக்கு வாய்ப்பு
06 Dec 2024சென்னை, தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சனிக்கிழமை (இன்று) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
-
பல்லடம் படுகொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் அண்ணாமலை வலியுறுத்தல்
06 Dec 2024திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-12-2024.
06 Dec 2024 -
சாதி, மதவெறியுடன் தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயரை உருவாக்குவோரின் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
06 Dec 2024சென்னை, தமிழகத்தில் சிலர், ஓரிடத்தில் நிகழ்ந்த சம்பவத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல், அதில் அரசின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளாமல், தெரிந்திருந்தாலும் திட்டமிட்டு வதந்த
-
அதானியை முதல்வர் சந்திக்கவில்லை: பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை
06 Dec 2024சென்னை, அதானியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கவில்லை என்று தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, இதுதொடர்பாக பொய் தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
-
ஃபெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிப்பு
06 Dec 2024புதுச்சேரி, ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரி, காரைக்கால் பேரிடர் பாதித்த பகுதிகளாக நேற்று அறிவிக்கப்பட்டது.
-
வடிவேலு தாக்கல் செய்த மான நஷ்ட வழக்கு: நடிகர் சிங்கமுத்துவிற்கு ஐகோர்ட் நிபந்தனை
06 Dec 2024சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தும் தெரிவிக்க மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யுமாறு நடிகர் சிங்கமுத்துவுக்கு சென
-
பாக்.கில் பயங்கரவாதிகள் 8 பேர் சுட்டுக் கொலை பாதுகாப்பு படையினர் நடவடிக்கை
06 Dec 2024லாகூர்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 8 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
அம்பேத்கர் நினைவு நாள்: பார்லி. வளாகத்தில் சிலைக்கு துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி மரியாதை
06 Dec 2024புது டெல்லி: அம்பேத்கரின் நினைவு நாளை ஒட்டி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர
-
கலிபோர்னியாவில் 7.0 ரிக்டர் அளவில் உலுக்கிய நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை வாபஸ் - மக்கள் நிம்மதி
06 Dec 2024வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகாக பதிவாகியிருந்தது.
-
அ.தி.மு.க. ஆட்சி மீது அவதூறு பரப்புவது கண்டனத்திற்குரியது: எடப்பாடி பழனிசாமி பேச்சு
06 Dec 2024அரியலூர், கடந்த ஆட்சியில் அ.தி.மு.க. நலத்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என முதல்வர் ஸ்டாலின் பத்திரிகை மற்றும் ஊடகத்தின் வாயிலாக செய்திகளை பரப்பி வருகிறார்.
-
ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பல் குஜராத்தில் சிக்கியது
06 Dec 2024சூரத்: குஜராத்தில் ரூ. 70 ஆயிரத்துக்கு போலி மருத்துவ பட்டப்படிப்பு சான்றிதழை விற்ற கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
உலக அளவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பு சுவிஸ் வங்கி ஆய்வில் தகவல்
06 Dec 2024ஜூரிச்: கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக, சுவிஸ் வங்கி ஆய்வில் தெரிய வந்துள்ளது.
-
சபரிமலையில் நிறைபடி காணிக்கையாக நாணயங்களை வழங்க பக்தர்களுக்கு அனுமதி
06 Dec 2024திருவனந்தபுரம்: சபரிமலை சன்னிதானத்தில் நாணயங்களையும் நிறைபடி காணிக்கையாக பக்தர்கள் வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
பார்லி.யில் தொடர் அமளி: வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைப்பு
06 Dec 2024புது டெல்லி: அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.&nb
-
சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை அமைத்தவர்: அம்பேத்கரின நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
06 Dec 2024சென்னை, கல்வியின் மகத்துவத்தை உணர்த்தி, தனது பேரறிவால் சமத்துவத்துக்கும் நீதிக்கும் பாதை அமைத்தவர் அம்பேத்கர்.
-
எதிர்க்கட்சிகள் தொடர் அமளி எதிரொலி: பார்லி. வரும் 9-ம் தேதி ஒத்திவைப்பு
06 Dec 2024புது டெல்லி, அதானி விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் வரும் 9-ம் தேதி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.&nb
-
கொடநாடு வழக்கு: எதிர்தரப்பு சாட்சியாக எடப்பாடி, சசிகலாவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு
06 Dec 2024சென்னை: கொடநாடு வழக்கில் எதிர்தரப்பு சாட்சியாக முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமி மற்றும் வி.கே.சசிகலாவை விசாரிக்க சென்னை ஐகோர்ட் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது
-
மாநிலங்களவையில் காங்.,எம்.பி அபிஷேக் சிங்வியின் இருக்கைக்கு அடியில் பணக்கட்டு கண்டுபிடிப்பு விசாரணை நடத்த அவை தலைவர் உத்தரவு
06 Dec 2024புது டெல்லி: மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் மனு சிங்வி இருக்கைக்கு கீழே பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த அவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெ
-
ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை: வரும் 16-ம் தேதி மகராஷ்டிர அமைச்சரவை விரிவாக்கம் முதல்வர் பட்னாவிஸ் தகவல்
06 Dec 2024மும்பை: ஏக்நாத் ஷிண்டே எந்த இலாக்காவும் கேட்கவில்லை என்றும், வரும் 16-ம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் மகராஷ்டிர மாநில முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்தார்
-
கார்டினலாக இன்று பதவியேற்கிறார் கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப் வாடிகன் சென்ற இந்திய குழு
06 Dec 2024புது டெல்லி: கேரள பாதிரியார் ஒருவர் மிக மதிப்புமிக்க கார்டினலாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான பதவியேற்பு விழா இன்று நடைபெறுகிறது.
-
ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக தனது சொந்த கிராமத்திற்கு சென்றார் முர்மு
06 Dec 2024புவனேஸ்வர், ஜனாதிபதியான பிறகு முதல் முறையாக சொந்த கிராமத்திற்கு சென்றார் திரெளபதி முர்மு, அங்கு அவர் இது கிராமமல்ல, குடும்பம் என்று தெரிவித்தார்.
-
தலைநகர் டெல்லி நோக்கி பேரணி: விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு
06 Dec 2024தலைநகர் டெல்லி நோக்கி பேரணி: விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீச்சு
-
6.5 சதவீதமாக தொடர்கிறது: : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி
06 Dec 2024புது டெல்லி: 11-வது முறையாக ரெப்போ வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்துள்ளார்.