முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கூட்டுறவு துறையின் தீபாவளி சிறப்பு தொகுப்பு ரூ. 20.47 கோடிக்கு விற்பனை: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
Periyakaruppan 2023 06 27

சென்னை, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு   ரூ. 20.47 கோடிக்கு  விற்பனை செய்யப்பட்டுள்ளது என  அமைச்சர் பெரியகருப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, 

 முதல்வரின் அறிவுரையின் படி, கூட்டுறவுத்துறையின் மூலம் 31.10.2024 அன்று நடைபெற்ற தீபாவளி பண்டிகையை அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பாக கொண்டாடும் வகையில் பட்டாசு விற்பனை மற்றும் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை ஆகியவை நடைபெற்றது. 

தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தரமான பட்டாசுகளை உற்பத்தி நிறுவனங்களிலிருந்து நேரடியாக கூட்றவு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் பட்டாசுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் வகையில் 107 கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் 166 பட்டாசு விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ரூ.20.01கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதம பண்டகசாலைகள் நடத்தும் 65 சுயசேவைப்பிரிவுகள் மற்றும் 54 பல்பொருள் அங்காடிகளில் கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் மளிகைப்பொருட்கள் அடங்கிய தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை 28.10.2024 முதல் நடைபெற்றது. 

இதில், பிரீமியம் மற்றும் எலைட்  என இரண்டு வகையாக மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பும், இனிப்புகள் செய்வதற்கு தேவையான பொருட்கள் அடங்கிய “அதிரசம்-முறுக்கு காம்போ” என்ற விற்பனை தொகுப்பும் குறைந்த விலையில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 20,000 தீபாவளி சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் கூட்டுறவுத்துறையின் மூலம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பட்டாசு மற்றும் ”கூட்டுறவு கொண்டாட்டம் என்ற தீபாவளி சிறப்புத் தொகுப்பின் மூலம் ரூ.20.47 கோடி விற்பனை செய்யப்பட்டுள்ளது என  அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். 

 இதே போல, வரும் பொங்கல் திருநாளிலும் இது போன்ற சிறப்பு விற்பனையை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சீரிய முறையில் ஏற்பாடு செய்திடவும், சிறப்பாக மேற்கொள்ளவும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுக்கு அறிவுரைகளையும்  அமைச்சர் பெரியகருப்பன் வழங்கியுள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து