முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      சினிமா
Police 2024 08 12

Source: provided

சென்னை : தமிழகம் முழுவதும் அமரன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வீர மரணமடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அமரன். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், முகுந்த் கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். 

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தீபாவளி அன்று திரையரங்குகளில் அமரன் வெளியானது. படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தின் உண்மையான அடையாளம் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கம் அளிக்க சர்ச்சை அடங்கியது. 

தற்போது அமரன் படம் தொடர்பாக மற்றொரு சர்ச்சை எழுந்துள்ளது. முஸ்லிம்கள் மீதுவெறுப்பை விதைத்து, நல்லிணக்கத்தை கெடுக்கும் அமரன் திரைப்படத்தை தடைசெய்ய வேண்டும் என வலியுறுத்தி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

தேனாம்பேட்டை போலீசார், போராட்டக்காரர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.  இதே போல், அமரன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அமரன் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து