முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 நவம்பர் 2024      தமிழகம்
CV-Ganesan 2024-11-08

Source: provided

சென்னை : வீட்டு வசதித் திட்டத்தில் அதிக பயனாளிகளை சேர்க்க அமைச்சர் கணேசன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் நேற்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு கட்டுமான நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் வீடு கட்டிக் கொள்வதற்கு அல்லது தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளை சொந்தமாக ஒதுக்கீடு பெறுவதற்கு ரூ.4 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.

இந்த வீட்டுவசதி திட்டம் கட்டுமானத் தொழிலாளர்கள் பயனடையும் வகையில், அதிகளவில் பயனாளிகளை மாவட்டம் தோறும் சேர்க்க, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு துறை அலுவலர்களுக்கு அமைச்சர் கணேசன் அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து