முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது: மத்திய அமைச்சர் அமித் ஷா கண்டனம்

சனிக்கிழமை, 9 நவம்பர் 2024      இந்தியா
amit-shah 1

பாலமு (ஜார்க்கண்ட்), தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி காட்டும் அரசியல் சாசன புத்தகம் போலியானது. அதன் உள்ளே எதுவுமே இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாலமு நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில்  அமித் ஷா பேசியதாவது, 

தேர்தல் பிரச்சாரங்களின்போது ராகுல் காந்தி அரசியல் சாசன புத்தகத்தைக் காட்டுகிறார். ஆனால், அந்த புத்தகம் உண்மையில் அரசியல் சாசன புத்தகம் அல்ல. இவ்விஷயத்தில் இரண்டு நாட்களுக்கு முன் அவர் அம்பலமானார்.

ராகுல் காந்தி காட்டும் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தின் பிரதி ஒன்றை ஒருவர் பெற்றுள்ளார். எந்த உள்ளடக்கமும் இல்லாத அந்த புத்தகத்தின் அட்டையில் இந்திய அரசியலமைப்பு என்று எழுதப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். 

அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்கூத்தாக்காதீர்கள். இது அரசியல் சாசனத்தின் நம்பிக்கை பற்றியது. அரசியல் சட்டத்தின் போலி பிரதியை காட்டுவதன் மூலம் நீங்கள் அம்பேத்கரையும், அரசியல் நிர்ணய சபையையும் அவமதித்து விட்டீர்கள். 

காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை கேலிக்கூத்தாக்கியுள்ளது. ஆனால், பிரதமர்  மோடி நவம்பர் 26-ம் தேதியை அரசியலமைப்பு தினமாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளார்.  ஓ.பி.சி., பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் இடஒதுக்கீட்டைப் பறிக்கும் கெட்ட நோக்கம் காங்கிரசுக்கு உள்ளது. 

ஓ.பி.சி. ஒதுக்கீட்டிற்கு காங்கிரஸ் எதிரானது. மகராஷ்டிராவில் உலமாக்களின் பிரதிநிதிகள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தபோது, சிறுபான்மையினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதாக அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதை பா.ஜ.க. ஒருபோதும் அனுமதிக்காது.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. உங்களின் நான்காவது தலைமுறை கூட, சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று ராகுல் காந்தியை நான் எச்சரிக்கிறேன். ஜார்க்கண்டில் உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது என தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து