முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளம் வேகமாக வடிந்தததற்கு அரசின் நடவடிக்கைகளே காரணம் அமைச்சர் சேகர்பாபு பேட்டி

செவ்வாய்க்கிழமை, 3 டிசம்பர் 2024      தமிழகம்
sekarbabu 2024-12-03

Source: provided

 

சென்னை: வெள்ளம் வேகமாக வடிந்தததற்கு தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

பெஞ்சல் புயல் பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பேருதவியாக, வெள்ள பாதிப்பில் இருந்து தமிழகத்தை காக்கும் கடவுளாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். முந்தைய காலங்களில் 13 செ.மீ. மழை பெய்தாலே சென்னை ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும்.

ஆனால் தற்போது வெள்ளம் வேகமாக வடிந்தததற்கு அரசு எடுத்த நடவடிக்கைகளே காரணம். எதிர்க்கட்சிகள் குறைகளை சுட்டிக்காட்டினால் அதை ஏற்க தயாராக இருக்கிறோம். ஆனால் அவர்கள் வஞ்சக சூழ்ச்சியோடு அவதூறுகளை பரப்பி வருகிறார்கள்.

சாத்தனூர் அணை முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். கடந்த காலங்களை அவர் திரும்பி பார்க்க வேண்டும்.

2015-ம் ஆண்டு சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி முன்னறிவிப்பின்றி திறக்கப்பட்டதால் 280-க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானதை யாரும் மறக்க முடியாது. சாத்தனூர் அணையை பொறுத்தவரை, முதல்வரின்  உத்தரவுப்படி 25-ம் தேதியில் இருந்து படிப்படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம்  முன்னறிவிப்போடுதான் ஒரு லட்சத்து 68 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அதன் காரணமாகவே எந்தவித உயிர்சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. பல உயிர்களை காப்பாற்றிய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி கூறியிருக்க வேண்டும்.

ஆனால் அவர் வஞ்சக எண்ணத்தோடு குறை சொல்லிக் கொண்டு இருக்கிறார். தமிழக முதல்வரின் வெள்ள நிவாரண நடவடிக்கைகளை தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களும் பாராட்டிக் கொண்டு இருக்கின்றன.

எதிர்க்கட்சி தலைவருக்கு உண்மையிலேயே மனசாட்சி இருக்குமானால், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வெள்ள நிவாரண நிதியை கேட்க வேண்டுமே தவிர, தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.   

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து