முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரணம்: தி.மு.க. எம்.பிக்கள் தலா ரூ. ஒரு லட்சம் வழங்க முடிவு

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
T R Balu 2024-12-06

Source: provided

சென்னை:  தி.மு.க. எம்.பி.க்கள் தலா ரூ. ஒரு  லட்சம் வெள்ள பாதிப்பு பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார் .

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டு வீடுகளையும், உடமைகளையும் இழந்த மக்களுக்கு உதவும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். 

மற்றொருபக்கம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களை தமிழக அரசும், தனியார் தொண்டு நிறுவனங்களும், மாவட்ட நிர்வாகங்களும் கொடுத்து வருகின்றன. 

அந்த வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமது ஒருமாத ஊதியத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்கினார். இந்த நிலையில்,தி.மு.க. எம்.பி.க்களும் நிதி வழங்க முடிவு செய்துள்ளனர். 

மக்களவை மற்றும் மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்கள் தலா ரூ. ஒரு லட்சம் வெள்ள நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக டி.ஆர்.பாலு  தெரிவித்துள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து