முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய தமிழகம் வருகை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மத்திய குழுவினர் சந்திப்பு : தற்காலிக மறு சீரமைப்புப்பணிகளுக்காக 6,675 கோடி ரூபாய் வழங்க வலியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      தமிழகம்
CM 2024-12-02

Source: provided

சென்னை : தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதித்த பகுதிகளை கள ஆய்வு செய்ய வருகை தந்துள்ள மத்தியக் குழுவினர் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது, புயல் பாதித்த பகுதிகளில் தற்காலிக மறு சீரமைப்புப்பணிகளுக்காக மத்திய அரசு ரூ.6,675 கோடி வழங்க பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்தினார்.

மத்தியக்குழு...

முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று (6.12.2024) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ள வருகை தந்துள்ள பல்துறை மத்திய குழு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் இராஜேஷ் குப்தா, மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர்  கே. பொன்னுசாமி, மத்திய நிதித்துறை இயக்குநர் சோனாமணி அவுபம், மத்திய ஜல்சக்தி துறை இயக்குநர் ஆர். சரவணன், மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் பொறியாளர்  தனபாலன் குமரன், மத்திய எரிசக்தித் துறை உதவி இயக்குநர்  ராகுல் பாட்ச்கேட்டி, மத்திய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர்  பாலாஜி ஆகியோர் சந்தித்தனர்.

முதல்வர் கடிதம்....

தமிழ்நாட்டில் நவம்பர் 26 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிக கனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. மாண்புமிகு இந்திய பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2.12.2024 அன்று எழுதிய கடிதத்தில், ஃபெஞ்சல் புயலினால் ஏற்பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது என குறிப்பிட்டதோடு, பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாயினை உடனடியாக விடுவிக்குமாறு வலியுறுத்தி கேட்டுக் கொண்டதோடு, உடனடியாக மத்திய பல்துறை குழுவினை அனுப்பி சேத விவரங்களை கணக்கிடவும் கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார்.

பிரதமரிடம் வலியுறுத்தல்...

அதைத் தொடர்ந்து 3.12.2024 அன்று காலை பிரதமர், முதல்வர் ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது, முதல்வர், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தற்போது ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்து, இந்த இயற்கை பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு இடைக்கால நிவாரணமாக 2000 கோடி ரூபாயை உடனடியாக விடுவித்திட வேண்டும் என்றும், மத்திய குழுவினை சேத மதிப்பீடுகள் மேற்கொள்ள விரைந்து அனுப்பி வைத்திடுமாறும் மீண்டும் வலியுறுத்தினார்.

முதல்வருடன் சந்திப்பு...

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய பேரிடர் மேலாண்மை இணை செயலாளர்  இராஜேஷ் குப்தா அவர்களது தலைமையிலான பல்துறை மத்திய குழுவினர் முதல்வரை நேற்று தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது, முதல்வர் முதல்வர் அவர்கள், மத்திய குழுவிடம் ஃபெஞ்சல் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறு சீரமைப்புப் பணிகளுக்கு 6675 கோடி ரூபாய் வழங்கிட வேண்டி முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவினை அளித்தார். மேலும், மத்திய குழுவிடம் தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்புப் பணிகளுக்காக நிதியினை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து